கண்ணம்மாவை சந்தேகப்பட்டு நான் தப்பு பண்ணிட்டேன் மா.. சௌந்தர்யாவிடம் தேம்பி தேம்பி அழும் பாரதி!!

0

பாரதி கண்ணம்மா சீரியலில், பாரதிக்கு, கண்ணம்மா தவறு செய்யவில்லையோ என்ற எண்ணம் ஏற்படுகிறது. இதனால் அவர் கண்ணம்மாவுடன் மீண்டும் இணைவாரா? மாட்டாரா? என்ற கதைக்களத்துடன் ஒளிபரப்பட்டு வருகிறது.

பாரதி கண்ணம்மா:

இன்றைய பாரதி கண்ணம்மா எபிசோடில், கண்ணம்மாவின் நல்ல குணத்தை பற்றி பாரதி வெண்பாவிடம் சொல்லிக்கொண்டிருக்கிறார். இதை கேட்ட வெண்பா அவர் மனதை கலைக்க வேண்டுமென்றே கண்ணம்மாவை பற்றி தவறாக கூறி ஏத்திவிடுகிறார். உனக்கு குழந்தை பெத்துகிறதுக்கு சக்தி இல்லை.. அதுலேயே கண்ணம்மா யோக்கியம் இல்லன்னு உனக்கு தெரியலையா? என்று கூறுகிறார்.

 

இதனால் பாரதிக்கு மீண்டும் கண்ணம்மாவின் மீது வெறுப்பு வருகிறது. அதன் பின்னர் சௌந்தர்யா, அகிலன் பரிகாரம் செய்து நடக்க முடியாமல் வீட்டுக்கு வருவதை பார்க்கிறார். ஏன். என்ன ஆச்சு? என்று கேக்கிறார். அப்பொழுது தான் அஞ்சலி செய்யவேண்டிய பரிகாரத்தை அகிலன் செய்திருக்கிறார் என்பது தெரிந்ததும் சமாதானம் ஆகிறார். மேலும் அகிலனை ஓய்வு எடுக்க சொல்கிறார்.

அகிலனும் இனிமேல் இது போன்று செய்யவேண்டாம் என்று அஞ்சலிக்கு அறிவுரை கூறுகிறார். பின்னர் வெண்பா கூறியது போல் டபுள் டோஸ் மாத்திரைகளை எடுத்துக்கொள்ள அஞ்சலி முற்படும் போது, அஞ்சலி மீது பல்லி விழுந்ததால் கடவுள் புண்ணியத்தில் பயத்தில் மாத்திரைகளை கீழே போட்டு விடுகிறார்.

பின்னர் பாரதி சௌந்தர்யா, வேணுவை அழைத்து மீண்டும் கண்ணம்மாவை பற்றி புலம்ப ஆரம்பிக்கிறார். என மனசுல இப்போ வெறுமை மட்டும் தான் இருக்கு என்று சொல்கிறார். ஏன் அவ சொல்றதுல உண்மை இருக்க கூடாது. போனது போகட்டும்.. மிச்சம் இருக்க வாழக்கையாவது சேர்ந்து வாழணும்னு என் மனசு சொல்லுது.. என்று அழுதுக்கொண்டே பேசுகிறார். இதை கேட்ட பாரதியின் குடும்பம் அனைவரும் மகிழ்ச்சி அடைகின்றனர்.  இதோடு இன்றைய எபிசோடும் முடிவடைகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here