தன் மறுபக்கத்தை காட்டிய பாரதி கண்ணம்மா நாயகன் அருண்.. மூக்கின் மேல் விரல் வைத்த ரசிகர்கள்!!

0

விஜய் டிவியில் படு ஹிட்டாக ஓடி கொண்டிருக்கும் சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலின் நாயகன் பாரதி கதாபாத்திரத்தில் வருபவர் அருண் பிரசாத். பார்ப்பதற்கு சாக்கலேட் பாய் போல இருந்தாலும் ஜிம், ஒர்க் அவுட் என தன்னுடைய உடலை பிட்டாக வைத்திருப்பவர். தற்போது இன்ஸ்டாவில் ஆலமரத்தின் விழுதில் கூட ஒர்க் அவுட் செய்வது போல இவர் வெளியிட்டிருக்கும் வீடியோவை பார்த்து ரசிகர்கள் ஆச்சிரியப்பட்டுள்ளனர்.

நடிகர் அருண் பிரசாத் சினிமாவின் மீது உள்ள விருப்பத்தால் குறும் படங்கள் மூலம் திரை துறைக்கு அறிமுகமானார். அருண் ஏறக்குறைய பத்துக்கும் மேற்பட்ட குறும் படங்களில் நடித்துள்ளார். பின்னர் இவருக்கு ஜாக்பாட் அடித்தது போல விஜய் டிவியில் பாரதி கண்ணம்மா சீரியலில் வாய்ப்பு கிடைத்தது. பாரதி கண்ணம்மா சீரியலின் தொடக்கத்தில் பெரிதாக மக்களிடம் இருந்து வரவேற்பு கிடைக்கவில்லை. பின்னர் பாரதிக்கு கண்ணம்மா மீது சந்தேகம் வந்து கண்ணம்மா தன்மானத்துடன் வீட்டை விட்டு வெளியேறியது தொடங்கி இன்று முதல் TRP யில் நம்பர் 1 சீரியலாக மாறியுள்ளது.

 

இந்த சீரியலில் கதா நாயகன் அருணுக்கு மிக பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.பொதுவாகவே தன் உடலை பிட்டாக வைக்க விரும்புபவர் அருண். தற்போது ஆலமரத்தின் விழுதில் ஒர்க் அவுட் செய்வது போன்ற வீடியோவை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அருண் அசால்ட்டாக ஆலமரத்தின் விழுதின் மேல் தம் கட்டி ஏறுகிறார். இந்த வீடியோ சீரியல் ரசிகர்கள் மத்தியில் வேகமாக ஷேர் ஆகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Arun Prasath (@arun_actor)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here