நம்ம குழந்தைய காணோம்.. யாரோ கடத்திட்டு மிரட்டுறாங்க – பாரதியிடம் உண்மைகளை உடைக்கும் கண்ணம்மா!!

0

பாரதி கண்ணம்மாவில், எவ்வளவுதான் பாரதியையும் கண்ணம்மாவையும் சேர்த்து வைக்க குடும்பத்தினர் முயற்சி செய்தாலும் அது பலிக்கவில்லை. அவர்கள் சேருவர்களா? கண்ணம்மாவின் இரண்டாவது குழந்தை ஹேமா என்று தெரியவருமா? என்று விறுவிறுப்புடன் கதை நகர்கிறது.

பாரதி கண்ணம்மா:

இன்றைய எபிசோடில் கண்ணம்மா, தன் இரண்டாவது குழந்தையை கண்டுபிடிப்பது பற்றி யோசித்துக்கொண்டிருக்கிறார். அப்பொழுது இது பற்றி பாரதியிடமும் கேக்கலாம் என்று அவருக்கு போன் செய்கிறார். ஆனால் பாரதியோ நீ கூப்பிடதும் வர நான் ஆள் இல்ல. வரமுடியாது என்று சொல்கிறார்.

அதற்கு கண்ணம்மா ஒரு மணி நேரம் வந்தா போதும். ரொம்ப முக்கியமான விஷயம் என்று சொல்ல வேறு வழியில்லாமல் பாரதி வருகிறேன் என்று ஒப்புக்கொள்கிறார். பின்னர் சௌந்தர்யா குடும்பம் கண்ணம்மா, பாரதியை எப்படி செய்து வைப்பது, நாம் எடுக்கும் எல்லா முயற்சியும் வீணாகிறதே என்று பேசிக்கொண்டிருக்கின்றனர்.

 

அப்பொழுது வெண்பா அவர்களுக்கு தெரியாமல் வீட்டிற்குள் வந்து ஒட்டு கேட்டுக்கொண்டிருக்கிறார். சௌந்தர்யா அதை பார்த்துவிட்டு வெண்பாவை கூப்பிட்டு நன்றாக கிழிக்கிறார். நான் வேணு அங்கிள பார்க்க தான் வந்தேன் என்று சமாளிக்கிறார் வெண்பா.

இதையடுத்து வெண்பா, கண்ணம்மாவும் பீச்சில் சந்திக்கின்றனர். நான் இப்போ இருக்க பாரதியை பார்க்க வரல. என் பழைய பாரதி மாமாவ பார்க்க வந்தேன் என்று சொல்கிறார் கண்ணம்மா. அப்போ நீயும் என் பழைய கண்ணம்மாவ அனுப்பி வை என்று பாரதி சொல்ல இருவரும் தங்கள் பழைய நினைவுகளை மனம் நொந்து பேசிக்கொண்டிருக்கின்றனர். இருப்பினும் பாரதி திருந்த வில்லை. திமிராகவே பேசுகிறார்.

இறுதியாக கண்ணம்மா என்னை வழிப்போக்கன் கூட நெனச்சுட்டு நான் சொல்றத கேளுங்க.. நம்ம குழந்தைய காணோம். யாரோ கடத்திட்டு மிரட்டுறாங்க என்று சொல்ல பாரதி ஷாக் ஆகிறார். இதோடு இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here