தன்மானத்தை விடுத்து பாரதி வீட்டிற்கு செல்லும் கண்ணம்மா.. சௌதர்யா குடும்பத்தின் மாஸ்டர் பிளான் ஒர்கவுட் ஆகுமா??

0

பாரதி கண்ணம்மாவில் வேணு நெஞ்சு வலி வந்தது போல் நடித்து பாரதி கண்ணம்மாவை சேர்த்து வைக்க மாஸ்டர் பிளான் போடுகிறார். இந்த திட்டம் வெல்லுமா? என்பது இன்றைய எபிசோடில் நம்மளுக்கு தெரிய வரும்.

பாரதி கண்ணம்மா:

இன்றைய பாரதி கண்ணம்மா எபிசோடில் கண்ணம்மா வேணுவை பார்க்க அவசர அவசரமாக வருகிறார். நலம் விசாரித்த பின் வேணு, பாரதி கண்ணம்மாவை ஜோடியாக பார்க்கவேண்டும் என்று சொல்ல சௌந்தர்யா இருவரையும் கட்டாயப்படுத்தி ஜோடியாக நிற்க வைக்கிறார். பின்னர் என்னுடைய கடைசி ஆசை நீங்கள் இரண்டு பேரும் ஒன்னு சேரவேண்டும். சத்தியம் செஞ்சு கொடுங்க என்று கேக்கிறார் வேணு.  அப்பொழுது சீனியர் டாக்டர் உள்ளே வந்து வேணுவை செக் செய்கிறார். அந்த நேரம் பார்த்து வெண்பா கால் செய்ய கண்ணம்மா வெளியே வந்து பேசுகிறார். கண்ணம்மா மூலம் வெண்பா, வேணு ஹாஸ்பிடல்லில் அனுமதி ஆகிருப்பதை தெரிந்து கொள்கிறார்.

பின்னர் வீட்டில் லட்சுமி ஹேமாவுடன் போன் பேசிக்கொண்டிருக்கிறார். அப்பொழுது லட்சுமி, ஏன் உன் வீட்டில் எல்லாரும் என் மீதும், அம்மா மீதும் இவ்வளோ பாசம் காட்டுகின்றனர். நாம் இருவரும் ஒரே வீட்டில் பிறந்து இருக்கலாம் என பேசிக்கொண்டிருக்கிறாள்.

பின்னர் கண்ணம்மாவை தங்கள் வீட்டுக்கு வந்து தங்குமாறு கட்டாயப்படுத்துகின்றனர். கண்ணம்மா முடியாது என்று மறுக்கிறார். வேணு, சரி ஹாஸ்பிடலில் என்னை டிஸ்சார்ஜ் செய்யும்பொழுது என்னை வீட்டுக்கு வந்து விடு. இதை மட்டும் ஆவது செய் என்று சொல்ல, கண்ணம்மா சம்மதிக்கிறார்.

பின் பாரதி தவிர அனைவரும் வீட்டுக்கு வருகின்றனர். ஆனால் வாசலிலேயே கண்ணம்மா நிற்கிறார். மாமா சொன்னாங்கனு தான்  நான் இவ்ளோ தூரம் வந்தேன். நான் அசிங்கப்பட்ட இடத்திற்கு வரமுடியாது என்று சொல்கிறார். மேலும் ஒரு வேளை பாரதி மனசார என்னிடம் மன்னிப்பு கேட்டால் நான் அதை பற்றி யோசிக்கிறேன் என்று சொல்கிறார். இதோடு இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here