பாரதி, கண்ணம்மாவை சேர்த்து வைக்க புது நாடகத்தை அரங்கேற்றும் சௌந்தர்யா குடும்பம்… ரசிகர்கள் எதிர்பார்த்த இன்றைய எபிசோடு!! 

0

நாளுக்கு நாள் TRP அதிகமாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதியையும் கண்ணம்மாவையும் சேர்த்து வைக்க வேணுவும் அவர் குடும்பமும் புதிய நாடகம் ஒன்றேயே நடத்துகின்றனர்.

பாரதி கண்ணம்மா:

இன்றைய பாரதி கண்ணம்மா எபிசோடில் வேணுவுக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்படுகிறது. பின்னர் குடும்பமே அலறி அடித்துக்கொண்டு வேணுவை பாரதி ஹாஸ்பிடலிலேயே அனுமதிக்கின்றனர். பாரதியும் வேகவேமாக வேணுவை பரிசோதிவிட்டு குழம்புகிறார்.

வேணுவிடம் உங்களுக்கு ஒண்ணுமில்ல. நீங்க நல்லா தான் இருக்கீங்க.பதிலுக்கு வேணுவோ நீ ஒரு ஸ்கேன் கூட எடுக்கல.. அப்புறம் எப்படி சொல்லுற.. நீயெல்லாம் ஒரு டாக்டரா? என்று கேக்கிறார். வேணு இவ்வாறு பேசமாட்டாரே என்று குடும்பமே குழம்புகின்றனர்.

அப்பொழுது தான் வேணு இதெல்லாம் நடிப்பு என்று சௌந்தர்யாவிற்கும், அகிலனுக்கும் செய்கை காட்டுகிறார். இதனால் சௌந்தர்யா, அகிலனும் சேர்ந்து நடிக்கின்றனர். நெஞ்சு வலியை காரணம் காட்டி வேணு கண்ணம்மாவை பார்க்க வேண்டும் என்று சொல்ல சௌந்தர்யா போன் செய்கிறார்.

இதெல்லாம் பார்க்கும் பாரதிக்கு பற்றிக்கொண்டு வருகிறது. பின்னர் கண்ணம்மா தன் வீட்டில் லட்சுமிக்கு புது டிரஸ் போட்டு அழகு பார்க்கிறார். சௌந்தர்யா தன் மாமனாரின் நிலைமை பற்றி சொன்னதும் ஹாஸ்பிடலுக்கு விரைகிறார். அந்த நேரம் பார்த்து வெண்பா, மிஸஸ் வெண்பா பாரதி என்று கூப்பிடும் படி கால் செய்ய, கோவத்தில் கண்ணம்மா வெண்பாவை நன்றாக கிழிக்கிறார்.

இன்னொரு பக்கம் ஹாஸ்பிடலில் வேணு, சௌந்தர்யா, அகிலன் பசியில் முட்டை போண்டா  சாப்பிடும்பொழுது பாரதி வருகிறார். அப்பொழுது மீண்டும் வேணு நெஞ்சு வலி போல் நடிக்கிறார். என்ன மா? இது ஹாஸ்பிடல்.. இங்க முட்டை போண்டா சாப்பிடுறிங்க என்று சௌந்தர்யா, அகிலனிடம் கேக்க, உனக்காக தான் வாங்குனோம் பாரதி என்று அகிலன் சமாளிக்கிறார். இதோடு இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

ஜொலிக்கும் உடையில் மிடுக்காக ரீல்ஸ் செய்த ராஜா ராணி அர்ச்சனா – இன்ஸ்டாவில் ட்ரெண்டிங்காகும் வீடியோ!!

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here