ஹேமாவை பற்றிய அனைத்து உண்மைகளையும் சொன்ன சௌந்தர்யா – அடுத்தடுத்த திருப்பங்களுடன் இன்றைய பாரதி கண்ணம்மா எபிசோடு!!

0

விஜய் டிவியில் டாப் TRP ரேட்டிங்கில் ஒளிபரப்பப்படும் பாரதி கண்ணம்மாவில் ஹேமா, கண்ணம்மாவின் குழந்தை என்று தெரிய வருமா? வெண்பாவின் சூழ்ச்சிகள் வெளிவருமா? என்று பல ட்விஸ்ட்களுடன் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த பதிவில் இன்றைய எபிசோடு பற்றி காணலாம்.

பாரதி கண்ணம்மா:

இன்றைய பாரதி கண்ணம்மா எபிசோடில் அஞ்சலி சௌந்தர்யாவிடம் ஹேமா பற்றிய உண்மைகளை கூறும்மாறு கேக்கிறார். சௌந்தர்யாவும் வேறு வழியின்றி ஹேமா கண்ணம்மாவின் குழந்தை என்றும், பாரதியும் கண்ணம்மாவும் ஒன்று சேரவே தான் இவ்வாறு செய்ததாக சொல்கிறார். இதை கேட்டதும் அஞ்சலிக்கு ஹேமாவின் மீது அளவுகடந்த பாசம் ஏற்படுகிறது. ஹேமாவை கூப்பிட்டு முத்தம் எல்லாம் கொடுத்து பாசத்தை பொழிகிறார்.

பின்னர் கண்ணம்மா தன் வீட்டில் பாரதிக்கு விவாகரத்து தரும்படி வெண்பா சொன்னதை யோசித்து கொண்டிருக்கிறார். என்னை கஷ்டப்படுத்திய பாரதியை விட என் பொண்ணு தான் எனக்கு வேணும். நான் கண்டிப்பா பாரதிக்கு விவாகரத்து தருவேன் என்று நினைத்து கொண்டிருக்கிறார்.

மறுபுறம் அகிலன், சௌந்தர்யா, வேணு எப்படி பாரதியையும், கண்ணம்மாவையும் சேர்த்து வைப்பது பற்றி பேசிக்கொண்டிருக்கின்றனர். அதற்கு வேணு இருவரையும் நினைத்து எனக்கு நெஞ்சு வலி வந்திடும் போல என்று சொல்ல சௌந்தர்யா பதறுகிறார். இதன் மூலம் வேணுவுக்கு ஏதோ ஒரு ஆபத்து வரப்போகிறது என்பது தெரிகிறது.

பின்னர்  அஞ்சலி ஹேமா யாருன்னு தெரிஞ்சும் அகிலன் ஏன் என்கிட்ட எதுவுமே சொல்லல என்று நினைத்து கொண்டிருக்கிறார். மேலும் அகிலனிடம் நேரடியாகவே இதை கேக்கிறார். அப்பொழுது அகிலன் இது ஒரு மிக பெரிய குடும்ப ரகசியம். அதுனால தான் அஞ்சலி சொல்லல. உன்கிட்ட மறைக்கணும்னு நினைக்கல என்று சொல்ல அஞ்சலியும் புரிந்துகொள்கிறார்.

அப்பொழுது ஹேமா அஞ்சலியை பார்க்க வர, அஞ்சலி ஹேமாவிற்கு ஒரு பரிசு ஒன்றை கொடுக்க ஹேமா சந்தோசப்படுகிறார். மேலும் கண்ணம்மாவின் பொண்ணுன்னா எனக்கும் பொண்ணு தான் என்று நினைத்து தன்னை அம்மா என்று கூப்பிடும் படி ஹேமாவிடம் அஞ்சலி சொல்கிறார். ஹேமாவும் அவ்வாறே அம்மா என்று சொல்ல அழுதுகொண்டே ஹேமாவை இறுக அணைத்து கொள்கிறார். இவ்வாறு பலவித பாசப்போராட்டங்களுடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here