உன் இன்னொரு குழந்தை எங்க இருந்தாலும் நல்லா தான் இருப்பா.. ஹேமாவை பற்றி கண்ணம்மாவிடம் வாயை விடும் சௌந்தர்யா!!

0

பாரதி கண்ணம்மாவில், கண்ணம்மா தன் இரண்டாவது குழந்தையை தேடி படாதபாடு படுகிறார். இவரின் இந்த போராட்டத்துக்கு பிறகாவது அவர் தன் குழந்தையை கண்டுபிடிப்பாரா என்று விறுவிறுப்புடன் கதை நகர்கிறது.

பாரதி கண்ணம்மா:

இன்று பாரதி கண்ணம்மா சீரியலில் நல்ல வேலையாக கண்ணம்மா போலீஸ் ஸ்டேஷன் செல்வதற்கு முன்பு தடுத்தோம் என்று வெண்பா சாந்தியிடம் சந்தோசப்பட்டு பேசிக்கொண்டிருக்கிறார். பதிலுக்கு சாந்தி அவள இப்படி தான் மா பண்ணனும். அவள நா ஒரு தடவ திருப்பி அடிக்கணும் என்று சொல்கிறார்.

பின்னர் கண்ணம்மா கோவிலில் தன் இரண்டாம் குழந்தையை எப்படியாவது மீட்டு குடு.. என்று கடவுளிடம் வேண்டி 108 முறை அங்கப்ரதக்ஷணம் செய்கிறார். அப்பொழுது கோவிலுக்கு வர சௌந்தர்யா கண்ணம்மா அங்கப்ரதக்ஷணம் செய்வதை பார்க்கிறார்.

கண்ணம்மாவிடம் உடலை வருத்தி இது போன்று செய்ய வேண்டாம் என்று சொல்ல கண்ணம்மா மறுக்கிறார். அப்பொழுது கோவில் பூசாரி இந்த நேரம் தோஷம் இருப்பதாக சொல்லி பரிகாரத்தை இன்னொரு நாள் செய்யச்சொல்கிறார். அதன் பின்னர் சௌந்தர்யா உன் குழந்தை எங்கு இருந்தாலும் நல்லா தான் இருக்கும் என்று சொல்கிறார். அவ நல்லவங்க மத்தியில தான் இருப்பா என்று ஹேமாவை பற்றி சொல்லாமல் சொல்ல, அதையும் கண்ணம்மாவால் புரிந்து கொள்ள முடியவில்லை.

கண்ணம்மா வெண்பாவை பற்றி கூற முடியாமல் தவிக்கிறார். அதன் பின்னர் ஹேமாவுக்கு அஞ்சலி மெதுவடை செய்து கொடுக்க ஹேமாவிற்கு இருமல் வருகிறது. சமையல் அம்மா தான் தன்னை நினைப்பதாக கூற பாரதி கோவப்படுகிறார். அதே சமயம் வேணுவும் சௌந்தர்யாவும் கண்ணம்மா படும் கஷ்டத்தை நினைத்து புலம்புகின்றனர்.

அதன் பின்னர் பரிகாரம் செய்ததால் கண்ணம்மா தன் வீட்டில் உடம்பு வலியால் கஷ்டப்பட லட்சுமி ஆறுதல் வார்த்தைகளை கூறி கண்ணம்மாவிற்கு கால் அமுக்கி விடுகிறார். இதோடு இன்றைய எபிசொட் முடிகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here