கண்ணம்மா தப்பு செய்திருக்க மாட்டா.. அவ ஒரு தீ.. வெண்பாவிடம் புலம்பும் பாரதி!!

0

பாரதி கண்ணம்மா சீரியலில் இன்று எங்கு கண்ணம்மா தனக்கு துரோகம் செய்திருக்கமாட்டாளோ, தன் சந்தேக புத்தியால் கண்ணம்மாவை தவறாக நினைத்து விட்டோமா என்று பாரதிக்கு புரிகிறது.

பாரதி கண்ணம்மா:

பாரதி, தன்னிடம் மருத்துவம் பார்க்கும் ஒருவரின் தங்கையுடன் ஹாஸ்பிடலில் பேசிக்கொண்டிருக்கும்போது, அப்பெண் தன் அண்ணனின் சந்தேக புத்தியால் தான் அவன் ஹாஸ்பிடல் வரை வரும் நிலைமை வந்துவிட்டது. என் அண்ணி மிகவும் நல்லவங்க.. ஆனா என் அண்ணன் அவன் வாழ்க்கையை அவனே நாசம் பண்ணிட்டான் என்று கூறுகிறார். அப்போது ஏன் கண்ணம்மா நேர்மையானவளாக இருக்க கூடாது என்று பாரதிக்கு தோணுகிறது.

பின்னர் அஞ்சலி, ஜோசியர் சொன்ன பரிகாரத்தை செய்ய கோவிலுக்கு வருகிறார். ஆனால் கோவில் பூசாரி, ஒரு கல்லை கழுத்தில் கட்டிக்கொண்டு கோவில்லை சுற்றி வர சொல்கிறார். இது அஞ்சலியால் முடியாது என்பதால் அகிலனே இந்த பரிகாரத்தை செய்கிறார்.

பின்னர் பாரதி கண்ணம்மாவின் குணத்தை பற்றி தன் குடும்பத்தினர் சொன்னதை யோசித்து கொண்டிருக்கிறார். அப்போது அங்கு வெண்பா வர, நடந்தததை கூறுகிறார். நானும் மனுஷன் தானே.. நானும் தப்பு பண்ணிருக்கலாம்ல.. என்று கூறுகிறார்.  இதை கேட்டதும் வெண்பாவிற்கு தூக்கி வாரி போடுகிறது.

மேலும் தப்பு பண்ண ஒருத்தி இவ்வளவு சுய மரியாதையோட இருப்பாளா, அவள நா பாக்கும் போது எதுக்குமே பயப்படாம தீ மாதிரி இருப்பா என்று கண்ணம்மாவை பற்றி பாரதி சொல்ல, வெண்பாவிற்கு கோவம் தலைக்கு ஏறுகிறது. இதை பார்க்கும் போது கண்டிப்பாக பாரதியின் மனதை மாற்ற வெண்பா ஏதாவது ஒரு சதி திட்டம் திட்டுவார் என்பது புரிகிறது. இதோடு இன்றைய பாரதி கண்ணம்மா எபிசோடு முடிகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here