ஹேமாவிடம் லட்சுமி தான் உன் அக்கா என்று உண்மையை உளறும் கண்ணம்மா – இன்றைய பாரதி கண்ணம்மா எபிசோடு!!

0

கண்ணம்மாவிற்கு தற்பொழுது தான் ஒவ்வொரு உண்மையாக தெரியவருகிறது. இன்னும் DNA டெஸ்ட் எடுப்பது மட்டும் தான் பாக்கி என்று ரசிகர்கள் புலம்பி வரும் வேளையில் ஹேமாவை தன்னிடம் ஒப்படைக்க 4 நாள் கெடுவை சௌந்தர்யாவுக்கு கண்ணம்மா கொடுத்துள்ளார்.

பாரதி கண்ணம்மா:

இன்றைய பாரதி கண்ணம்மா எபிசோடில் வெண்பா ஏன் கண்ணம்மா தன்னிடம் மாற்றி மாற்றி பேசி தன்னை கலாய்த்தது பற்றி சாந்தியிடம் சொல்லி யோசித்து கொண்டிருக்கிறார். அதே சமயம் சௌந்தர்யா வீட்டில் சௌந்தர்யா கையில் ஏற்படுத்திக்கொண்ட காயம் பற்றி குடும்பமே கவலை பட்டுக்கொண்டிருக்கின்றனர்.

அப்பொழுது தான் பாரதி வந்து கண்ணம்மா ஏன் வந்தாள்? என்ன சொல்ல வந்தாள்? என கேக்க சௌந்தர்யா கண்ணம்மா ஹேமா அமெரிக்கா செல்வது போல் கேட்ட கனவு கண்டதால இங்கே வந்து ஹேமாவை பார்த்தாள் என கூறி சமாளிக்கிறார்.

அதை தொடர்ந்து ஹேமா கண்ணம்மாவுக்கு கால் செய்து பேசுகிறார். மேலும் உன் அக்கா லட்சுமியிடம் பேசு என ஹேமாவிடம் கண்ணம்மா சொல்ல லட்சுமியும் ஹேமாவும் குழம்புகின்றனர். மிகவும் சந்தோசத்துடன் லட்சுமி ஹேமா பேசுவதை கண்ணம்மா பார்க்கிறார்.

பிறகு இரவு சாப்பிடும் நேரத்தில் சௌதர்யா கையில் அடிபட்டு இருப்பதை பாரதி பார்த்து கவனமாக இருக்கும்படி அறிவுறுத்துகிறார். இதோடு இன்றைய பாரதி கண்ணம்மா எபிசோடு முடிகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here