அவன் எக்கேடு கெட்டு போனா எனக்கென்ன.. பாரதி மீது இருந்த கொஞ்ச நஞ்ச பாசத்தையும் உதறி தள்ளிய கண்ணம்மா!!

0

பாரதி கண்ணம்மாவில், கண்ணம்மாவிற்கு ஒவ்வொரு உண்மையாக தெரிய வருகிறது. இதனால் தொடர் விறுவிறுப்புடன் சென்று இதன் TRP எகிறி வருகிறது.

பாரதி கண்ணம்மா:

பாரதி கண்ணம்மாவின் இன்றைய எபிசோடில் கண்ணம்மாவிற்கு ஹேமா தன் குழந்தை என்று தெரிந்ததும் பாரதி வீட்டிற்கு சென்று ஹேமாவிற்கு முத்த மழை பொழிகிறார். நான் தான் உன் அம்மா என்று கூறும்போது சௌதர்யா வேண்டும் என்றே பாரதி, ஹேமாவை வெளியே அனுப்பி விடுகிறார்.

பின்பு  சௌதர்யா, வேணு, அகிலன், அஞ்சலி என தன் குழந்தையை பிரித்து தன்னை ஏமாற்றியவர்களை கிழி கிழி என கண்ணம்மா கிழிக்கிறார். மேலும் ஹேமாவை தன் கையோடு கூட்டிகொண்டு செல்வதாகவும் கூறுகிறார். இதனால் குடும்பமே பதறுகிறது.

சௌதர்யா, என்னை 4 அடி கூட அடிச்சுக்கோ, நீ இப்போ ஹேமாவ கூட்டிட்டு போனா பாரதி நிலைகுலைஞ்சு போயிடுவான் என்று கூறுகிறார். மொத்த குடும்பமே கெஞ்சுகிறது.

ஆனால் அதை எல்லாம் காதில் வாங்கிக்கொள்ளாத கண்ணம்மா, யாரு எக்கேடு கெட்டு போனா எனக்கென்ன? எனக்கு என் குழந்தை வேண்டும். அவ வராமல் இங்கிருந்து செல்லமாட்டேன் என பிடிவாதமாக சொல்கிறார். இதோடு இன்றைய எபிசோடு முடிகிறது.

கண்ணம்மா சொல்வது போல் ஹேமாவை பிரித்து கூட்டி செல்வாரா? இல்லை பாரதிக்காக விட்டு செல்வாரா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்கவேண்டும்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here