பாரதி மீது மீண்டும் கண்ணம்மாவுக்கு ஏற்படும் நல்ல அபிப்ராயம்.. மகிழ்ச்சியடையும் சௌந்தர்யா!!

0

பாரதி, கண்ணம்மாவிடம் உனக்கு நான் தான் பிரசவம் பார்த்தேன் என்ற உண்மையை சொல்வதால் கண்ணம்மாவிற்கு மீண்டும் பாரதி மீண்டும் ஒரு நல்ல அபிப்ராயம் வருகிறது.

பாரதி கண்ணம்மா:

இன்றைய எபிசோடில் கண்ணம்மா சௌந்தர்யாவை பார்க்கவேண்டும் என கோவிலுக்கு வர சொல்லி பேசுகிறார். அப்பொழுது தான் பாரதி தான் தனக்கு பிரசவம் பார்த்ததாகவும் இதை அவரே தான் என்னிடம் சொன்னார் என்ற உண்மையை சொல்கிறார் கண்ணம்மா.

இதனால் சௌந்தர்யாவிற்கு சந்தோசத்தில் அனந்த கண்ணீரே வருகிறது. உங்க மகன் மீது நன்றி உணர்வும், மரியாதையும் இப்போ எனக்கு இருக்கு என்று கண்ணம்மா சொல்ல அதை கேட்டு இன்னும் பூரிப்படைகிறார் சௌந்தர்யா.

 

பின்னர் இரவு வீட்டில் சாப்பிடு முடித்துவிட்டு அஞ்சலி சமையலை அனைவரும் பாராட்டும் பொழுது சௌந்தர்யா வருகிறார். பாரதியை பார்த்ததும் அவருக்கு கண்ணம்மா சொன்னதுதான் நியாபகம் வருகிறது. அதை பற்றி பாரதியிடம் கேட்டு விடுகிறார்.

ஆனால் பாரதியோ கண்ணம்மா தான் பிரசவம் பார்த்தது பிடிக்காமல் உங்களிடம் கம்பளைண்ட் கொடுத்தாளா என்று கேக்கிறார். அதை தொடர்ந்து கண்ணம்மா பாரதியை பற்றி புகழ்ந்து பேசியதை சௌந்தர்யா சொல்ல குடும்பத்தினர் அனைவரும் உண்மையை சொல்லும்படி பாரதியை கேக்க அவரும் ஆம் என்று ஒத்துக்கொள்கிறார்.

இதை கேட்டதும் வேணு, அகிலன், அஞ்சலி என மாறிமாறி பாரதியை பாராட்டுகின்றனர். வேணு இப்போதான் உன்ன நெனச்சு ரொம்ப பெருமையா இருக்கு என்று சொல்ல அஞ்சலி, நீங்க ஒரு ஹீரோ என்று சொல்கிறார். இதோடு இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here