நம்மள பதட்டமா வச்சிட்டு இவங்க மட்டும் ஜாலியா இருக்காங்க – ‘பாரதி கண்ணம்மா’ ஷூட்டிங் ஸ்பாட் போட்டோஸ்!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ மற்றும் ‘ராஜா ராணி 2’ தொடர்களின் மகா சங்கமம் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் பீச் ரெசார்ட்டில் ஜாலியாக இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

மகா சங்கமம் படப்பிடிப்பு

‘பாரதி கண்ணம்மா’ மற்றும் ‘ராஜா ராணி 2’ சீரியலின் படப்பிடிப்பு தற்போது சென்னை மகாபலிபுரத்திலுள்ள பீச் ரெசார்ட்டில் நடந்து வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இந்த இரண்டு தொடர்களுக்கும் மற்ற தொடர்களை விட எப்போதுமே அதிகமான டிஆர்பி ரேட்டிங் காணப்படும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த இரண்டு தொடர்களையும் இயக்குனர் பிரவீன் பென்னட் இயக்கி வருகிறார். ரொம்ப ஜாலியான டைப் கொண்ட இயக்குனர் பிரவீன் தற்போது மகா சங்கமம் ஸ்பெஷல் எபிசோட் படப்பிடிப்பை ஜாலியாக செய்து வருகிறார். ஒரு சீரியல் மட்டும் கூடியிருக்கும் படப்பிடிப்பு இடம் முழுவதும் கலவரமாக தான் காணப்படும்.

போட்டியில் கலந்துக்கொள்ள ஒத்துக்கொள்ளும் பாரதி, கண்ணம்மா – வெண்பா செய்ய போகும் சதித்திட்டம் என்ன??

அந்த அளவுக்கு ஷூட்டிங் ஸ்பாட்டுகள் நிறைய என்டர்டைன்மென்ட் மற்றும் ஃபன் நிறைந்ததாக இருக்கும். இதே போல இரண்டு தொடர்கள் ஒரு இடத்தில் சங்கமித்தால் அந்த இடம் எப்படி இருக்கும் சொல்லவே தேவையில்லை. அதுவும் திருமணம் ஆகாத பேச்சுலர்ஸ் இருந்தால் கலவரத்துக்கு பஞ்சமே இருக்காது.

அந்த வகையில் பீச் ரெசார்ட்டில் நடந்து கொண்டிருக்கும் சிறப்பு ஒளிபரப்பின் படப்பிடிப்பில் ஒரே கூத்தும் கும்மாளமாக ஜாலி பண்ணி கொண்டிருக்கிறார்கள் ராஜா ராணி மற்றும் பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர்கள். அந்த வகையில் மகா சங்கமம் படப்பிடிப்பு காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது.

இந்த மகா சங்கமம் எபிசோடுகள் இன்னும் ஒரு வாரம் வரை ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. அதனால் இரண்டு சீரியலின் ரசிகர்களும் உற்சாகத்தில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here