பாரதி கண்ணம்மாவும், ராஜா ராணி சீரியலும் இணையும் மெகா சங்கமம் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் ‘பாரதி கண்ணம்மா’ மற்றும் ‘ராஜா ராணி 2’ ஆகிய இரண்டு தொடர்களின் மகாசங்கமம் தற்போது ஒளிபரப்பாகவுள்ளது. இந்த தகவலால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

விஜய் டிவி மகாசங்கமம்

விஜய் டிவியின் டிஆர்பி ரேட்டிங்கை உச்சத்தில் வைத்திருக்கும் தொடர்கள் ‘பாரதி கண்ணம்மா’ மற்றும் ‘ராஜா ராணி 2’. இந்த இரண்டு தொடர்களையும் இயக்கி வருபவர் பிரபல சின்னத்திரை தொடர்களின் இயக்குனர் பிரவீன் பென்னட். ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் அமைதியான பெண்ணாக இருந்து வந்த கண்ணம்மா, தற்போது அதிரடி நாயகியாக மாறியுள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கணவனின் அவப்பேச்சை எதிர்க்கும் கண்ணம்மா, சுய மரியாதைக்காக வீட்டை விட்டு வெளியேறுகிறார். தன்மானத்தோடு வாழ நினைக்கும் பெண்ணான கண்ணம்மா மக்கள் மனதில் உயர்ந்த இடத்தை அடைந்துள்ளார்.

அதே போல ‘ராஜா ராணி 2’ தொடரில், சாதிக்க துடிக்கும் பெண்ணான சந்தியா குடும்ப சூழ்நிலை காரணமாக திருமணம் செய்து கொள்கிறார். அதிரடியான பெண்ணாக இருந்த சந்தியா, தன் கணவன் குடும்பத்துக்காக தன் கனவை தியாகம் செய்யும் பெண்ணாக இருந்து வருகிறார்.

‘நடிகைகள் சம்பளம் அதிகமாக கேட்டால் பிரச்சனையில் தான் முடியும்’ – சமந்தா ஓபன் டாக்!!

இந்த இருவேறு கதைகளும் தற்போது மகாசங்கமத்தில் இணையவுள்ளது. முன்னதாக இந்த இரண்டு தொடர்களுக்கும் மக்கள் மத்தியில் எக்கச்சக்க வரவேற்புகள் இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த இரு தொடர்களின் மகாசங்கமம் வரும் வாரங்களில் ஒளிபரப்பாக உள்ளது.

இந்த தகவலால் ‘பாரதி கண்ணம்மா’ மற்றும் ‘ராஜா ராணி’ ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். முன்னதாக விஜய் டிவியில் சில வாரங்களுக்கு முன்னாக ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மற்றும் ‘பாக்கியலட்சுமி’ தொடர்களின் மகாசங்கமம் ஒளிபரப்பானது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here