பாரத் பந்திற்கு பெருகும் ஆதரவு – தமிழகத்தில் பேருந்து, ரயில் சேவைகள் நிறுத்தமா??

0

டெல்லியில் விவசாயிகள் 12-வது நாளாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.மத்திய அரசு 5 முறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர், 6-ம் கட்ட பேச்சு வார்த்தை வருகிற 9-ம் தேதி நடக்கவுள்ள நிலையில், மத்திய அரசு மீது நம்பிக்கை இல்லாத விவசாயிகள் சங்க தலைவர்கள் வருகிற 8-ம் தேதி “பாரத் பாத்” என்ற நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிக்கைவிட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் எவ்வித பாதிப்பு இருக்காது எனவும் மக்களில் இயல்பு வாழ்க்கைக்காக அரசு சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது

தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைகள்:

இது குறித்து போக்குவரத்து கழக உயர் அதிகாரி தெரிவித்துள்ளது, பொது வேலைநிறுத்தத்தில் மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்படாது பேருந்துகள் வழக்கம் போல் செயல்படும் தமிழகத்தில் பல்வேறு நகரங்களுக்கு இடையே இயக்கப்படும் அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்கள், மாநகர மற்றும் நகர பஸ்கள் அனைத்தும் வழக்கம் போல் நாளை இயங்கும். சென்னையில் 3 ஆயிரம் மாநகர பேருந்துகள் தினமும் இயக்கப்படுகிறது.

விவசாயிகள் போராட்டத்திற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், இடதுசாரி முன்னணி தலைவர்கள் சீதாராம் யெச்சூரி, டி.ராஜா உள்ளிட்ட 11 கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தமிழ்நாட்டிலும் தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சிகள் விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்துள்ளனர். இதனால் நாளை நடைபெற உள்ள விவசாயிகள் மற்றும் எதிர்க்கட்சிகளின் நாடு தழுவிய போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது.பெரும்பாலான இடங்களில் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் டிச. 27 முதல் லாரிகள் ஓடாது!!

அனைத்து போக்குவரத்து கழகத்தில் இருந்தும் டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் முழுமையாக பணியில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. விடுப்பில் இருக்கும் தொழிலாளர்களையும் பணிக்கு உடனே திரும்புமாறு கிளை மேலாளர்கள் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆம்னி பஸ் உரிமையாளர் சங்க தலைவர் கூறும்போது,”பொது வேலைநிறுத்தம் காரணமாக நாளை பகலில் ஆம்னி பஸ் சேவை ரத்து செய்யப்படுகிறது. பகல் நேரத்தில் மிக குறைந்த அளவில் தான் பஸ்கள் இயக்கப்படும். மாலை 6 மணிக்கு பிறகு எல்லா பகுதிகளுக்கும் ஆம்னி பஸ் சேவை தொடரும் என்றார்”.

மேலும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றாலும் ரயில் போக்குவரத்து தடைபடாது என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படும் சிறப்பு ரெயில்கள் வழக்கம் போல் நாளை இயக்கப்படுகிறது. வழக்கமான கால அட்டவணைப்படி ரயில்கள் புறப்பட்டு செல்லும். மழை, வெள்ளம் போன்ற பேரிடர் காரணத்தால் மட்டுமே சேவை ரத்து செய்யப்படும்.

நாளை நடைபெறும் வேலைநிறுத்தத்திற்கு தொ.மு.ச., சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யூ.சி., ஐ.என்.டி.யூ.சி., மத்திய தொழிற்சங்கம், விடுதலை சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் ஆதரவு அளித்திருப்பதால் ஆட்டோக்கள் ஓடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் நாளை நடைபெற உள்ள முழு அடைப்புக்கு அனைத்து எதிர்க்கட்சிகளும், தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன.

ரயில் மற்றும் பஸ் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க பலத்த பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். 1 லட்சம் போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here