போட்டியில் கலந்துக்கொள்ள ஒத்துக்கொள்ளும் பாரதி, கண்ணம்மா – வெண்பா செய்ய போகும் சதித்திட்டம் என்ன??

0

பாரதி பேசிய கோபத்தில் அங்கிருந்து கிளம்பும் கண்ணம்மாவை சௌந்தர்யா தடுத்து நிறுத்துகிறார். பாரதியை கண்ட கண்ணம்மா போட்டியில் கலந்து கொள்ளுவரா என இன்றைய எபிசோட் ஒளிபரப்பாக உள்ளது.

சிறப்பு மெகா சங்கமம்

இன்றைய எபிசோடில் பாரதியும் கண்ணம்மாவும் ஒருவரையொருவர் கேவலமாக திட்டிக்கொள்கிறார்கள். பாரதியின் பேச்சால் கோவப்பட்ட கண்ணம்மா அங்கிருந்து கிளம்புகிறார். அதுவரை பொறுமையாக இருந்த சௌந்தர்யா, நானும் பாத்துகிட்டே இருக்கேன் உங்க இஷ்டத்துக்கு நீங்க சண்டை போட்டுட்டு இருக்கீங்க. என்ன நெனச்சுட்டு இருக்கீங்க. எனக்கு என்ன ஆனாலும் உங்களுக்கு கவலை இல்ல என கோவப்படுகிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

என் மேல உண்மையான பாசம் இருக்குன்னா நீங்க இங்க இருந்து கிளம்பக்கூடாது என உறுதியாக கூறுகிறார் சௌந்தர்யா. சௌந்தர்யாவின் பேச்சை கேட்ட பாரதியும் கண்ணம்மாவும் அங்கிருந்து போவதில்லை என முடிவு எடுக்கிறார்கள். அத்தை இங்க இருந்து போனதுக்கு அப்பறமும், நாம இன்னும் இங்க இருக்கிறது எனக்கு என்னவோ பயமா இருக்கு என சந்தியா கூறுகிறார்.

சிவகாமியின் கோபத்தை தணிக்க சரவணனின் அப்பா ஒரு ஐடியா கொடுக்கிறார். அப்போது அங்கு வரும் ஆதியும், பார்வதியும் சரவணன், சந்தியாவுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கிறார்கள். சரவணனின் அப்பா, சந்தியா சரவணன் இருவரையும் சமாளித்து போட்டிக்கு தயார் செய்கிறார். பின்பு முதல் போட்டி ஆரம்பமாகிறது. உறவுகளுக்குள் உள்ளதான ஒற்றுமை குறித்து கண்டுபிடிக்க போட்டி நடக்கிறது.

நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிக்கும் யுனிவர்சல் பாஸ் – வைரலாகும் ட்விட்டர் பதிவு!!

போட்டியில் கண்ணம்மாவையும், சௌந்தர்யாவையும் மேடைக்கு பாரதி அழைத்து வருகிறார். முதல் போட்டியை அர்ச்சனா தொகுத்து வழங்குகிறார். ஒவ்வொருவருக்காக போட்டி நடக்கிறது. போட்டியில் சௌந்தர்யாவின் திருமணநாள் பற்றி கேட்ட கேள்விக்கு கண்ணம்மா சரியான பதிலை எழுதுகிறார்.

அதே போல சௌந்தர்யா பற்றி கேட்கப்பட்ட எல்லா கேள்விகளுக்கும் இருவரும் சரியான பதிலை எழுதுகிறார்கள். அதே போல கண்ணம்மாவை பற்றி சௌந்தர்யாவுக்கு கேட்ட கேள்விகளுக்கும் இருவரது பதிலும் ஒரே மாதிரியாக இருந்தது. கண்ணம்மா மற்றும் சௌந்தர்யாவுக்குள் இருக்கும் ஒற்றுமையை பார்த்து அனைவரும் வியந்து விட்டார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here