பாரதி, கண்ணம்மாவின் காதலை புரியவைக்கும் சௌந்தர்யா – கோவத்தில் கொந்தளிக்கும் வெண்பா!!

0

உறவுகளுள்ள ஒற்றுமையை குறித்து கேட்கப்பட்ட எல்லா கேள்விகளுக்கும் கண்ணம்மாவும் சௌந்தர்யாவும் சரியான பதில் எழுதுகிறார்கள். அதே சமயம் சரவணன் மற்றும் சந்தியா இந்த போட்டியில் ஜெயித்தார்களா, இல்லையா என ஒளிபரப்பாக உள்ளது இன்றைய சிறப்பு தொடர்.

மெகா சங்கமம் சிறப்பு தொடர்

இன்றைய எபிசோடில் கண்ணம்மா, சௌந்தர்யா இருவருக்கும் உள்ள ஒற்றுமையை கண்டுபிடிக்க போட்டி நடக்கிறது. போட்டியில் கண்ணம்மாவுக்கு பிடித்த கவிஞர் யாரென்று கேட்க பாரதி என்று இருவரும் ஒரே பதில் எழுதுகிறார்கள். இரண்டாவது கேள்வியாக கண்ணம்மாவுக்கு பாரதி கொடுத்த சிறந்த பரிசு எது என்று கேட்க, பாரதி கண்ணம்மாவுக்காக எழுதிய ‘பாரதி காதலியே கண்ணம்மா’ என்ற பாடல் தான் பிடிக்கும் என சௌந்தர்யா கூருகிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பாரதி எழுதி பாடிய பாடலை போட சொல்லி கேட்கிறார் அர்ச்சனா. பின்பு பாரதியை பார்க்கும் அர்ச்சனா உங்க ஒற்றுமைய பார்த்தா எங்களுக்கே கண் பட்டிடும் போல இருக்கு, வீட்டுக்கு போய் சுத்தி போடுங்க என கூறுகிறார். அதே போல கண்ணம்மாவின் செல் நம்பரின் கடைசி ஐந்து எண்களை எழுத சொல்ல இருவரும் சரியாக எழுதுகிறார்கள்.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை – இன்றைய நிலவரம்!!

பிறகு கண்ணம்மாவுக்கு அதிகமாக பிடித்தது சௌந்தர்யாவா, பாரதியா என்று கேட்க, சௌந்தர்யா என்று பதில் எழுதுகிறார் கண்ணம்மா. அதே போல சௌந்தர்யாவும், கண்ணம்மாவுக்கு பாரதியை விட என்னை தான் அதிகம் பிடிக்கும் என கூறுகிறார்.

அடுத்ததாக சரவணன் சந்தியா இருவருக்குள்ளும் போட்டி நடக்கிறது. இவர்களுக்கு கேட்கப்பட்ட முதல் கேள்வி சந்தியாவின் 12ஆம் வகுப்பு மார்க் என்ன என்று கேட்டதற்கு, சரவணன் தவறான பதில் எழுதுகிறார். தவறான பதில் சொன்னதற்காக சந்தியா தலையில் தண்ணீர் ஊற்றப்படுகிறது. அடுத்து அடுத்து கேட்ட எல்லா கேள்விகளுக்கும் தவறான பதில் சொல்கிறார் சரவணன்.

கடைசியில் சிவகாமிக்கு சந்தியாவிடம் பிடித்தது எது என்று அர்ச்சனா கேட்க, சந்தியா சரவணனுக்கு சரியான ஜோடி என்று அம்மா சொல்லுவாங்க என சரவணன் கூறுகிறார். அதே பதிலை சந்தியாவும் எழுத க்ளாப்ஸ் தெரிக்கிறது. சரவணன் பற்றி கேட்ட கேள்விகளுக்கெல்லாம் சந்தியா சரியாக பதில் சொல்லுகிறார். இத்துடன் இன்றைய சிறப்பு தொடர் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here