ராதிகா-கோபி திருமணத்தில் ராமமூர்த்தி வைக்க போகும் ஆப்பு.., சூடுபிடிக்கும் பாக்கியலட்சுமி சீரியல்!!

0
ராதிகா-கோபி திருமணத்தில் ராமமூர்த்தி வைக்க போகும் ஆப்பு.., சூடுபிடிக்கும் பாக்கியலட்சுமி சீரியல்!!

யாருக்கும் தெரியாமல் ராதிகாவை திருமணம் செய்யப்போவது நினைத்து கோபி மிகவும் வருத்தப் படுகிறார். இதனால் கண்டிப்பாக அம்மாவிடமாவது சொல்லிவிட வேண்டுமென ராதிகாவை திருமணம் செய்யப் போகிற விஷயத்தை ஈஸ்வரியிடம் கோபி சொல்ல போகும் படியான எபிசோடு இன்று வெளியாகியிருக்கிறது.

பாக்கியலட்சுமி

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடரில் கோபியின் திருமண ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. ஆனாலும், கோபி நாம் செய்வது தவறா என மனதுக்குள் குழம்பி கொண்டேதான் இருக்கிறார். இத்தனை வயதுக்கு பிறகும் திருமணம் செய்யலாமா மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என அதைப்பற்றி யோசிக்க ஆரம்பித்துவிட்டார். மேலும், திருமணம் செய்யப் போவதை கட்டாயமாக ஈஸ்வரியிடம் சொல்ல வேண்டுமென ராதிகாவிடம் கூறுகிறார்.

ஆனால், ராதிகா திருமணத்தில் ஏதேனும் பிரச்சினை வந்து விடுமோ என பயப்படுகிறார். கண்டிப்பாக அம்மாவிடம் சொன்னால் தான் என்னால் நிம்மதியாக இருக்க முடியும் எனக் கூற உடனே ஈஸ்வரிக்கு கால் செய்து கோவிலுக்கு வரும் படி கோபி கூறுகிறார்.என்னதான் கோபியை தவறு செய்திருந்தாலும் கோபியின் மீது ஈஸ்வரி அளவுகடந்த பாசம் வைத்திருக்கிறார். இதனால் கோபியின் ஆசைக்காகவாது கண்டிப்பாக ராதிகாவுடன் கோபியை சேர்த்துவைக்க தான் போகிறார்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

இந்நிலையில், கோபியை சந்திக்க வேண்டும் என வீட்டில் யாரிடமும் சொல்லாமல் கோவிலுக்கு கோபியை பார்க்க செல்லும்படியான எபிசோட் இன்று வெளியாகியுள்ளது. ஆனால், ராமமூர்த்தி தாத்தாவிற்கு ஈஸ்வரியின் மீது சிறிதளவில் சந்தேகம் எழுந்திருக்கிறது. ஏன் ஈஸ்வரி இன்று வித்தியாசமாக நடந்து கொள்கிறார் என சந்தேகப்படுகிறார். இதனையடுத்து, கோபியின் திருமண விஷயம் தெரியவந்த பிறகு தாத்தாவின் முடிவு என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். கண்டிப்பாக திருமணத்தை தடுத்து நிறுத்த ஏதாவது வழி செய்வார் ராமமூர்த்தி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here