பாக்கியாவோட ஆட்டமே இனிமேல் தான் ஆரம்பமே.., வாயடைத்துப்போன மொத்த குடும்பம்!!

0

பாக்கியா தனக்குக் கொடுக்கப்பட்ட முதல் ஆர்டரை வெற்றிகரமாக சமைத்து முடித்து ஆறு மண்டபத்திற்கு சமைக்கும் ஆர்டரை வாங்கும் படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது. மேலும், பாக்கியாவினால் இது முடியாது என நினைத்த குடும்பத்தினர்கள் வாயடைத்துப்போய் இருக்கின்றனர்.

பாக்கியலட்சுமி

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடரில் கோபி வீட்டை விட்டு சென்றதும் மொத்த குடும்பத்தையும் கவனித்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு பாக்கியாவிற்கு வந்துவிட்டது. ஆனால், மொத்த குடும்பமும் கோபி செய்த தவறை மன்னித்து பாக்கியா கோபியை வீட்டைவிட்டு அனுப்பியது தான் தவறு என குற்றம் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். அதையும் தாண்டி குடும்பத்திற்காக உழைக்க வேண்டும் என பாக்கியா ஓயாது உழைத்துக் கொண்டிருக்கிறார்.

தற்போது கூட இந்த மிகச் சிறிய அளவிலான மசால் கம்பெனியை வைத்து குடும்பம் மொத்தத்தையும் கவனித்து கொள்ள முடியாது என பெரிய ஆர்டர் கேட்டு ஒரு கம்பெனிக்கு சென்று இருப்பார். அந்த கம்பெனியிலும் பாக்கியாவின் திறமையை சோதிப்பதற்காக முதலில் ஒரு மண்டபத்திற்கு சமைப்பதற்கான ஆர்டரை கொடுத்திருக்கிறார்கள்.

அந்த முதல் ஆர்டரை பாக்கியா எந்த தவறும் இல்லாமல் நன்றாக செய்துவிட்டால் அதற்குப் பிறகு பெரிய ஆர்டர் தருவதாக உத்தரவாதம் கொடுத்து இருக்கிறார்கள். இந்நிலையில் பாக்கியா அந்த முதல் ஆர்டரை வெற்றிகரமாக செய்து முடிக்கும் படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது. எப்படியோ அடுத்தபடிக்கு சென்ற பாக்கியாவின் வாழ்க்கையில் இனி எல்லாமே முன்னேற்றம் தான். மேலும் பாக்கியாவிற்கு இந்த ஆர்டரை கொடுத்தவர் ஏற்கனவே பரிச்சியம் ஆனவர் தான். இனி தான் பாக்கியாவின் ஆட்டமே ஆரம்பமாகவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here