என்னது.. நான் சிஸ்டரா?? காண்டான பாக்கியலட்சுமி சீரியல் நடிகை.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!!

0

பாக்கிய லட்சுமி சீரியல் நடிகை திவ்யா கணேஷ், ராஜா ராணி படத்தில் வரும் “ஏய் யாரு சிஸ்டர்..” என தொடங்கும் நஸ்ரியாவின் டயலாகிற்கு ரீலிஸ் செய்து அதை ரசிகர்களிடம் ஷேர் செய்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் உங்கள யாராவது சிஸ்டர்ன்னு சொல்லுவாங்களா என கமெண்ட் செய்து வருகின்றனர்.

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் மருமகள் ஜென்னி கதாபாத்திரத்தில் வருபவர் நடிகை திவ்யா கணேஷ். இவர் முதன்முதலில் சின்னத்திரையில் அறிமுகமாகியது புதுமணம் சீரியல் மூலமாகத்தான். பின்னர் சு மங்கலி, கேளடி கண்மணி போன்ற தொடர்களில் நடித்தார். அதன் பின்னர் விஜய் டிவியில் ப்ரைம் டைமில் ஒளிப்பரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

இந்த தொடரில் இவருக்கு திருமணம் முடிந்த பின்பும், குழந்தை தனமாக இவர் செய்யும் செயல்கள் ரசிகர்களை ஈர்த்தது. தற்போது இவருக்கு தமிழ் நாட்டில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. பார்க்க பக்கா ஹீரோயின் போல் இருக்கும் இவருக்கு பேவரைட் நடிகைகள் நயன்தாரா, த்ரிஷாதானாம். இவர் அடிக்கடி இன்ஸ்டாவில் ரீல்ஸ் செய்து ஷேர் செய்வார். தற்போது நஸ்ரியா, ராஜா ராணி படத்தில் ஆர்யாவுடன் சண்டை போடும் காட்சியில் வரும் வசனத்திற்கு ரீல்ஸ் செய்துள்ளார். அது இன்ஸ்டாவில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by divyaganesh (@divya_ganesh_official)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here