திருமணத்தை நினைத்து பதட்டமாகும் ராதிகா.., கோபி சொன்ன அந்த வார்த்தை.., சூடுபிடிக்கும் பாக்கியலட்சுமி கதைக்களம்!!

0
திருமணத்தை நினைத்து பதட்டமாகும் ராதிகா.., கோபி சொன்ன அந்த வார்த்தை.., சூடுபிடிக்கும் பாக்கியலட்சுமி கதைக்களம்!!
திருமணத்தை நினைத்து பதட்டமாகும் ராதிகா.., கோபி சொன்ன அந்த வார்த்தை.., சூடுபிடிக்கும் பாக்கியலட்சுமி கதைக்களம்!!

விஜய் டிவி பாக்கியலட்சுமி சீரியலில்,கோபி-ராதிகாவின் கல்யாணம் நடக்குமா, நடக்காதா என்ற விறுவிறுப்பான நிலையில் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என்பதை பார்ப்போம்.

இன்றைய எபிசோட்:

இன்றைய எபிசோடில், நீண்ட நேரம் ஆகியும் எழில் வீட்டிற்கு வரவில்லை என்பதால் பாக்கியா அவருக்காக காத்து கொண்டுள்ளார். அப்போது எழில் வீட்டுக்கு வர ஏன் இவளோ லேட் என்று கோவப்படுகிறார் பாக்கியா. அப்பொழுது எழில் தனது கதையை தயாரிப்பாளர் மாற்ற வேண்டாம், இதையே மெயின்டைன் செய்யலாம் என்று சொன்ன விஷயத்தை பாக்கியாவிடம் கூறுகிறார். இதனால் பாக்கியா மிகவும் சநதோஷமடைகிறார். இந்த விஷயத்தை எழில் அமிர்தாவுக்கும் ஷேர் செய்ய அவரும் சந்தோஷமடைகிறார்.

ஆனால் எழில், வர்ஷினியுடன் பைக்கில் வந்த விஷயத்தை அமிர்தாவிடம் சொல்லாமல் போனை வைத்துவிடுகிறார். அந்நிலையில் அமிர்தா ஏன் அந்த விஷத்தை மட்டும் எழில் சொல்லாமல் விட்டார் என யோசிக்கும் போது உடனே எழிலிடம் இருந்து மறுபடியும் அமிர்தாவிற்கு கால் வந்தது. அப்போது எழில், உங்க வீட்டு வழியாகத்தான் நானும் வர்ஷினியும் பைக்கில் வந்தோம் அத சொல்ல மறந்துட்டேன் அதற்காகத்தான் கால் பண்ணேன் என கூறுகிறார்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

இந்த பக்கம் ராதிகா கல்யாணம் நல்லபடியா நடக்குமா என்று யோசித்து டல்லாக இருப்பார். அப்போது அவர் அண்ணன் ஏன் ராதிகா இப்படி டல்லா இருக்க என கேட்க, கல்யாணம் பற்றி தான் யோசிக்கிறேன் என்று சொல்கிறார். அதற்கு சந்துரு, எல்லாம் சரியாக நடக்கும் என சொல்லிக் கொண்டிருந்த சமயத்தில், கோபி வர அப்போது ராதிகாவின் அம்மா உங்கள் வீட்டில் கல்யாணம் பத்தி சொல்லி இருக்கீங்களா என கேட்கிறார். கோபி ஆமாம் அம்மா கிட்ட சொல்லி இருக்கேன் என சொல்ல, போச்சு அவங்க கண்டிப்பா பிரச்சனை பண்ணுவாங்க என ராதிகா அம்மா கூறுகிறார்.

வைகைப்புயல் வடிவேலு எடுத்த திடிர் முடிவு – இது நமக்குத் தேவையே இல்லை என திட்ட வட்ட அறிவிப்பு!!

அதற்கு கோபி அதெல்லாம் ஒரு பிரச்சனையும் வராது, என்ன நடந்தாலும் என் முடிவுல நான் உறுதியாக இருக்கிறேன் என தைரியம் கூறுகிறார். மற்றொரு பாக்கியா ரிசப்ஷனுக்கு சமைக்க கல்யாண மண்டபத்திற்கு ரெடி ஆகி விட்டார். ஜெனி நான் உங்களோடு வரேன் என சொல்ல செழியன் போக வேண்டாம் என்று தடுக்கிறார். இருப்பினும் அவர் பேச்சைக் கேட்காமல் கிளம்பி சென்றுவிட்டார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here