
பாக்கியலட்சுமி சீரியலில் இப்போது ராதிகாவின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. பாக்கியா வீட்டில் உட்கார்ந்து கொண்டே அவர்களை எல்லாம் ஆட்டி வைக்கிறார் ராதிகா. இன்னொரு பக்கம் ராதிகா, பாக்கியாவிடம் மாட்டிக் கொண்டு திண்டாடுகிறார் கோபி. இதில் கோபி படும் பாட்டை பார்க்கவே ஏராளமானோர் பாக்கியலட்சுமி தொடரை பார்க்க ஆரம்பித்து விட்டனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
ஒரு புறம் இவர் நடிக்கும் கேரக்டருக்கு எதிர்ப்புகள் வந்தாலும் சிலர் இவர் நடிப்பை ரசிக்கத்தான் செய்கின்றனர். இப்படி சீரியலில் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கும் நேரத்தில் கோபி கேரக்டரில் நடிக்கும் சதீஷ் சீரியலை விட்டு விலகப் போவதாக அண்மையில் தகவல் வெளியாகியது. இப்படி இருக்கையில் சீரியல் குழுவினர் இவரது கடைசி நாள் ஷூட்டிங்கை கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.
ஹீரோயின்களுக்கு இது மட்டும் சினிமாவில் கிடைக்கல.., விஜய் பட நடிகை குமுறல்!!!
இப்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் சீரியல் நீங்கள் இல்லாமல் எப்படி நகரப் போகிறது என்று தெரியவில்லை என வருத்தத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் இவருக்கு பதில் சன் டிவியில் கண்ணான கண்ணே சீரியலில் நடித்த பப்லூ பிருத்வி தான் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.