ராதிகாவுக்கு கட்டாயமாக காரை வாங்கி கொடுக்கும் கோபி… சமையல் ஆர்டரை செய்ய முடியாமல் திண்டாடும் பாக்கியா!!

0

விஜய் டிவியின் பல பரபரப்பான காட்சிகளுடன் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்று, சமையல் ஆர்டர் செய்யாமல் தவித்துக் கொண்டிருக்கிறார் பாக்கியா. ஆனால் இது பற்றி எதையும் கண்டுகொள்ளாமல் ராதிகாவுக்கு கண்டிப்பாக கார் வாங்கி தருவதில் உறுதியாக இருக்கிறார் கோபி.

பாக்கியலட்சுமி சீரியல் 

பாக்கியலட்சுமி சீரியலில் செல்வி கொடுத்த அதிக பில்ட் அப்பினால் மிக பெரிய சிக்கலில் மாட்டி உள்ளார் பாக்கியா. இந்நிலையில் இன்று, இதை கேட்ட குடும்பத்தினர் அதிர்ச்சியாகின்றனர். மேலும் கோபி சரி சொல்ல வேண்டியதுதானா என நக்கலாக சொல்கிறார். இதையடுத்து பாட்டி, இனியா மற்றும் கோபி பாக்கியாவை பார்த்து கேலியும் கிண்டலுமாக பேசுகின்றனர்.

இவர்களை எழில் திட்டிக் கொண்டே இருக்கிறார். இருப்பினும் பேச்சை விடாமல் கோபி மற்றும் பாட்டி பாக்கியாவை திரும்ப திரும்ப வெறுப்பேத்தும் படி சொல்லிக்கொண்டே இருக்கின்றனர். இதனால் பாக்கியா கண்கலங்கிய படி நின்று கொண்டிருக்கிறார்.

பின்னர் இதை யோசித்தபடி பாக்கியா உட்கார்ந்திருக்கிறார். அப்பொழுது டி கப் உடன் வரும் எழில் அவருக்கு ஆறுதல் கூறி, நீ ஏன் அவங்க கிட்ட சொன்ன, அவங்க உன்ன கிண்டல் பண்றாங்கன்னு சொல்லிட்டு இருக்கிறார்.

அப்பொழுது பாக்கியா நீ சொன்ன ஜோதிகா படம் பற்றி தான் யோசிச்சுட்டு இருக்கேன்னு சொல்கிறார். அந்த படத்தின் கதையை பற்றி மிக தெளிவாக  எடுத்து கூறிக்கொண்டு அவருக்கு நம்பிக்கை தருகிறார். இவ்வாறு எழில் பாக்கியாவுக்கு நம்பிக்கை ஊட்டும் வகையில் பேசிக்கொண்டிருக்கிறார். இந்நிலையில் கோபி ராதிகா வீட்டிற்கு வருகிறார்.

அப்பொழுது மையூ நாளைக்கு கார் வாங்க போவதாக கூறுகிறார். அதற்கு கோபி என்கிட்ட எதுவும் சொல்லவே இல்ல என கேட்கிறார். மேலும் பணம் ரெடி பண்ணிட்டியா என கேட்கிறார். அதற்கு ராதிகா லோன் ரெடி பண்ணிட்டேன் என்று கூற, அதற்கு கோபி எவ்வளவு லட்சம் ஆனாலும் பரவாயில்லை நான் தான் தருவேன் என கூறுகிறார்.

இந்நிலையில் செல்வி மற்றும் பாக்கியா சமையல் செய்து கொடுத்தவர்களின் எண்ணிக்கை விவரம் பற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்பொழுது மையூ கார் வாங்க உள்ளதாக மெசேஜ் அனுப்புகிறார். அதை கேட்ட பாட்டி ராதிகா சம்பளம் வாங்குறா? அவ வாங்குவா.. இங்க எல்லாம் கோபி தான் பாக்க வேண்டி இருக்கு என மறைமுகமாக பாக்கியாவை கரித்து  கொட்டுகிறார். மேலும் மேலும் பாக்கியாவை வார்த்தையால் நோகடிக்கிறார். இத்துடன் கதை முடிகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here