செல்வியால் வசமாக சிக்கிய பாக்கியா… பறிபோகுமா சமையல் ஆர்டர்???

0

விஜய்  டிவியின் டாப் லிஸ்ட் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்று செல்வி பாக்கியாவின் கேட்டரிங் பற்றி கொடுத்த ஓவர் பில்ட் அப் காரணமாக, அவருக்கு 1000 பேருக்கு சமைக்க சமையல் ஆர்டர் கிடைக்கிறது. இதனால் செய்வதறியாமல் இருக்கிறார் பாக்கியா.

பாக்கியலட்சுமி சீரியல்

பாக்கியலட்சுமி சீரியலில் ஜெனி வேலைக்கு போவது குறித்து பாக்கியா எடுத்து கூறிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் பாக்கியா வழக்கமாக ஆர்டரின் பெயரில் உணவு வழங்கும் ஒரு வீட்டில் இருக்கும் மேடம் ஒருவரிடம் இருந்து போன் கால் வருகிறது. இந்நிலையில் இன்றைய கதையில், பாக்கியா மற்றும் செல்வி குழப்பத்துடன் அந்த மேடத்தின் வீட்டிற்கு செல்கின்றனர்.

அங்கு அந்த மேடத்தின் கணவர் ராஜசேகர் பாக்கியாவின் கேட்டரிங் பற்றி ஒவ்வொரு கேள்விகளாக கேட்க செல்வி, 1000 ஆர்டர் மேல் எடுத்து செய்ததாகவும், நிறைய பேர் தங்களின் கேட்டரிங்கில் வேலை செய்வதாக பொய் மேல பொய்யை அடுக்கிக்கொண்டே போகிறார் செல்வி.

இந்நிலையில் வாயை வைத்து சும்மா இருக்காமல் செல்வி பாக்கியா பத்தி பில்ட் அப் பன்ணிகிட்டே இருக்கிறார். இந்நிலையில் அந்த மேடம் மற்றும் ராஜசேகர் ஒரு லிஸ்டை நீட்டி தன்னுடைய கம்பெனி நிகழ்ச்சிக்கு ஒரு 1000 பேருக்கு சமைக்குமாறு கூறுகிறார். இதை பார்த்து பிரமிப்பில் முழித்துக் கொண்டிருக்கிறார்.

அதன் பின்னர் செய்வதறியாமல் பாக்கியா செல்வியை பார்த்து முறைத்தபடி யோசித்து கொண்டே இருக்கிறார். அந்த வீட்டை விட்டு வெளியே வரும் பாக்கியா, செல்வியை பிடித்து கண்டபடி திட்டிக்கொண்டிருக்கிறார். வீட்டிற்கு வந்தும் விடாமல் அவரை திட்டிக்கொண்டு இருக்கிறார். அப்பொழுது அங்கு வரும் எழில் எதுக்கு இப்படி இரண்டு பெரும் சண்டை போடுறீங்க என சிரித்தபடி இருக்கிறார்.

அதற்கு பாக்கியா அங்கு நடந்ததை கூறி லிஸ்டை நீட்ட, இதைக்கேட்டு எழில் 1000 பேருக்கா என வாயை பிளக்கிறார். மேலும் இதை முழுவதையும் நம்மளே செய்யணுமாம், அதுவும் நம்ம வீட்டுலையே வச்சு செய்யணுமாம் என கடும் கோபத்துடன் எழிலிடம் கூறுகிறார். இந்நிலையில் இதை அனைத்தயும் பயத்துடன் செல்வி கீழே உட்கார்ந்தபடி கேட்டு கொண்டிருக்கிறார்.

எழில் இப்போ என்ன செய்ய போறனு கேட்கிறார். அதற்கு பாக்கியா நான் இப்படியே போய் இது என்னால முடியாதுன்னு சொல்லபோறேனு சொல்கிறார். அப்பொழுது செல்வி ஜோதிகாவின் ஒரு படத்தை கூறி அதை மாறி ஏன் நம்ம செய்யக்கூடாது என கேட்க அதற்கு பாக்கியா அது சினிமா நிஜ வாழ்க்கையில் இது சாத்தியமே இல்லை என திட்டுகிறார்.

பின்னர் வீட்டில் இருக்கும் அனைவரும் உணவு சாப்பிட்டு கொண்டிருக்கின்றனர். அப்பொழுது பாட்டி சிரித்தபடி பாக்கியாவின் ஆர்டர் பற்றி கேலியும் கிண்டலுமாக சொல்லிக்கொண்டிருக்கிறார். மேலும் 1000 பேருக்கு சமைக்க வேண்டும் என்று கூற குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சியில் இருக்கின்றனர். இதோடு கதை நிறைவு பெறுகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here