பாகுபலி வெப் சீரிஸ்ஸை வேண்டாம் என ஒதுக்கிய நெட்பிலிக்ஸ் – கோடிக்கணக்கில் ஏற்பட்ட நஷ்டம்!!

0

இந்திய அளவில் மிக பிரபலமான பாகுபலி திரைப்படத்தை மையமாக வைத்து வெப் சீரிஸ் ஒன்று தயாரிக்கப்பட்டு வந்தது. தற்போது அந்த வெப் சீரிஸ்ஸை வேண்டாம் என நெட்பிலிக்ஸ் நிறுவனம் மறுத்துள்ளது.

பாகுபலி வெப் சீரிஸ்:

ராஜமௌலி இயக்கத்தில் உருவாக்கப்பட்ட பாகுபலி திரைப்படம் இந்திய அளவில் மிக பெரிய வெற்றியை கொடுத்தது. இந்த திரைப்படத்தின் முதல் பாகம் வெற்றியடைந்தால் இரண்டாம் பாகமும் உருவாக்கப்பட்டது. தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளத்திலும் இந்த திரைப்படம் வெளியாகி அனைத்து மொழிகளிலுமே சூப்பர் ஹிட்டானது. இந்த திரைப்படத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா, தமன்னா,ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ் ஆகியோர் நடித்திருந்தனர்.

இப்படத்திற்கு கிடைத்த வெற்றியால் பாகுபலியை அப்படியே வெப் சீரிஸ்ஸாக தயாரித்து பிரபல நெட்பிலிக்ஸ் தளத்தில் வெளியிட முடிவு செய்தனர். பாகுபலி முதல் பாகத்திற்கு முன்பு என்ன நடந்தது என்பது பற்றியும், சிவகாமி கதாபாத்திரத்தில் நடித்த ரம்யாகிருஷ்ணன் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்தும் இந்த சீரிஸ் உருவாக்கப்பட இருந்தது. ஆனால் இந்த வெப் சீரிஸ் திடீரென வேண்டாம் என நெட்பிலிக்ஸ் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டு சில நாட்களிலேயே நிறுத்தப்பட்டுள்ளதால் 150 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாம்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here