தமிழக மக்களே உஷார் ., இந்த பகுதிகளில் நாளை (செப்.,17) மின்தடை!

0
தமிழக மக்களே உஷார் ., இந்த பகுதிகளில் நாளை (செப்.,17) மின்தடை!

தமிழகத்தில் நாளை (செப் 17) கோவில்பட்டி சாத்தூர் மற்றும் திருத்தங்கல் துணை மின்நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டு மின்தடை ஏற்படும் என சிவகாசி மின்வாரிய செயற்பொறியாளர் பாபநாசம் அறிவித்துள்ளார்.

மின்தடை:

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள துணை மின் நிலையங்களில் மாதம்தோறும் மின் ஊழியர்கள் மூலம் பராமரிப்பு பணிகள் நடைபெறும். மேலும் நமது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அனைத்து துறைகளிலும் சிறப்பான திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். இந்த வகையில் மின்வாரிய துறையில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இந்த அடிப்படையில், மின்கம்பங்களில் ஏற்படும் மின் கசிவு காரணமாக ஏற்படும் விபத்துகளை தடுப்பதற்கு தமிழக மின் வாரியம், பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த வகையில் சாத்தூரில் நாளை (செப். 17) மின்தடை ஏற்படும் என்று சிவகாசி மின்வாரிய செயற்பொறியாளர் பாபநாசம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் சாத்தூர் மற்றும் திருத்தங்கல் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

எனவே ஒத்தையால், சடையம்பட்டி,சாத்தூர் நகர், வெங்கடாசலபுரம், ஓ. மேட்டுப்பட்டி, அமீா்பாளையம், பெரியகொல்லப்பட்டி, மேட்டமலை, படந்தால், சின்னக்கொல்லப்பட்டி, செங்கமல நாட்சியாா்புரம், திருத்தங்கல் நகர், சாரதா நகர், பூவநாதபுரம், ஸ்டேட் பேங்க் காலனி, தேவர்குளம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here