ஓட்டுநர் சிந்தனைக்கு ஏற்ப இயங்கும் Benz Avatar கார் – ஒளிக்கு ஏற்ப நிறமாற்றம் அடையும் வினோதம்!!

0

பென்ஸ் நிறுவனத்தின் புதிய வகை Benz Avatar கார் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும், அதில் பல சிறப்பம்சங்கள் அடங்கியுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய Benz Avatar கார்:

உலகின் நம்பர் ஒன் கார் நிறுவனங்களின் பட்டியலில் தொடர்ந்து இடம்பெற்று வரும் Benz நிறுவனம் தற்போது  Benz Avatar என்ற புதிய ரக காரை அறிமுகப்படுத்த உள்ளது. ஜெர்மனி மியூனிச் நகரத்தில் நடைபெற்ற IAA Mobility 2021 என்ற நிகழ்ச்சியில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் Vision AVTR என்ற புதிய தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உருவாக்கவுள்ள கார்களைக் குறித்த திட்டத்தை வெளியிட்டுள்ளது.

இந்தக் காரின் தொழில்நுட்பம் குறித்த அறிமுகம் கடந்த ஆண்டு அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரத்தில் நடைபெற்ற CES 2020 என்ற நிகழ்ச்சியில் நடைபெற்றிருந்தது குறிப்பிடத் தகுந்தது. இது மட்டுமல்லாமல், இந்த புதிய காரில் பிரமிப்பூட்டும் பல ஆச்சரியங்கள் இடம்பெற உள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த காரில், மனிதர்களின் சிந்தனையின் அடிப்படையில் இயங்கச் செய்யும் மூளை கணினி இயக்க கருவி பொருத்தப்பட உள்ளதாகவும்,  இதன் மூலம், பட்டன்களை அழுத்தியோ, டச் ஸ்க்ரீனைப் பயன்படுத்தியோ காரை இயக்காமல், ஓட்டுநரின் சிந்தனைக்கு ஏற்ப காரில் பயணிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது போக, மேலும் டேஷ்போர்டில் பொருத்தப்பட்டிருக்கும் ஒவ்வொரு சிறிய லைட்டும் ஒவ்வொரு செயல்பாடுகளைக் குறிப்பதாகவும், இது கார் ஓட்டுபவர் ஒரு லைட் மீது தனது கவனத்தைச் செலுத்தும் போது, அந்த லைட்டுக்கு உரிய செயல்பாடு நிறைவேற்றப்படும் அம்சங்கள் இதில் அடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.  மேலும், ஒளிக்கு ஏற்ப நிறமாற்றம் அடையும் வகையில் காரின் உட்புறம் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், விபத்தை தடுக்கும் வகையில் புதிய வகை சிறப்புகள் இடம் பெறலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here