“முதல்வர் எங்களை மிரட்டினார்”  –  ஆளுநர் பகீர் தகவல்!!!

0

மேற்கு வங்க ஆளுநர் ஜக்தீப் தன்கர், மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தங்களை மிரட்டியதாக தெரிவித்திருப்பது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Youtube  => Subscribe செய்ய கிளிக் பண்ணுங்க!!

ஆளுநர் பகீர் தகவல்:

யாஸ் புயல் சேதாரங்களை மதிப்பீடு செய்ய மேற்கு வங்கத்திற்கு ஆய்வுசெய்ய பிரதமர் மோடி சென்றிருந்தார். அவர் கலந்துகொண்ட கூட்டத்தில் மம்தா பானர்ஜி ஆஜராகவில்லை.  கூட்டத்தில் பங்கேற்க முடியாது என்று, பிரதமர் மோடியிடம் தெரிவித்து விட்டே சென்றதாக, முதலமைச்சர் மம்தா பானர்ஜி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதன் எதிரொலியாக அலபனை மத்திய அரசு பணிக்கு அனுப்பி வைக்குமாறு உள்துறை அமைச்சகம் உத்தரவிட ஆட்டம் சூடுபிடித்தது. இதனை சற்றும் எதிர்பாராத மத்திய அரசு பிரதமர் கூட்டத்தைப் புறக்கணித்தது ஏன் என்பதற்கான விளக்கம் கேட்டு உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.

இதனை தொடர்ந்து மேற்கு வங்க ஆளுநர் ஜெகதீப் தங்கர் ட்விட்டர் பதிவில் மம்தா மீது குற்றஞ்சாட்டியிருக்கிறார். அவரது பதிவில், “பிரதமருடான கூட்டத்துக்கு முன்பே முதலமைச்சர் மம்தா பானர்ஜி என்னை தொலைபேசியில் அழைத்துப் பேசினார். கூட்டத்தில் பாஜக எம்எல்ஏ சுவேந்து அதிகாரி பங்கேற்றால் அக்கூட்டத்தில் தானும் தனது அதிகாரிகளும் பங்கேற்க மாட்டோம்” என்று அச்சுறுத்தினார்.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here