
இன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படும் தூக்க தினத்தை முன்னிட்டு தூங்குவதால் ஏற்படும் நன்மை பற்றி இப்பதில் பார்க்கலாம்.
தூக்கம்
ஓடிக்கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில் பலரும் தங்களுக்கு இருக்கும் பணிச்சுமையால் சரியான தூக்கம் இல்லாமல் தவிக்கின்றனர். இதனால் அவர்களது உடலிலும் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது. மேலும் ஒரு மனிதர் குறைவாக அல்லது அதிகமாக தூங்கினால் தேவையற்ற மன உளைச்சலும் சோம்பேறித்தனமும் தான் அதிகரிக்கிறது. இப்படி இருக்கையில் இன்று உலகம் முழுவதும் உலக தூக்க தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் தூக்கத்தினால் ஏற்படும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
நன்மைகள்
- ஒருவர் நாள் முழுவதும் வேலை பார்த்துவிட்டு நிம்மதியாக தூங்குவதன் மூலம் மன அழுத்தம், உடலில் உள்ள சோர்வு முற்றிலுமாக குறைகிறது.
- சரியாக தூங்குவதால் உடலில் சீரான ரத்த ஓட்டம், புத்துணர்ச்சி, மூளையின் செயல்படும் திறன் அதிகரித்தல் போன்றவை நமக்கு இயல்பாகவே கிடைக்கும்.
- தினமும் 8 மணி நேரம் தூங்குவதால் உடலில் நீர்ச்சத்து இழப்பால் ஏற்படும் நோயை சரி செய்யலாம் என மருத்துவர்கள் ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர்.
- ஆரோக்கியமான தூக்கத்தால் இதய சம்பந்தமான நோய்கள், புற்றுநோய் மற்றும் நீரிழிவு போன்ற நோய்களில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ள முடியும்.
- எவ்வளவுக்கு எவ்வளவு நிம்மதியாக தூங்குகிறோமோ அந்த அளவிற்கு நம் மனதில் உள்ள அழுத்தங்கள், கவலைகள் குறையும் என ஆய்வில் கூறப்படுகிறது.