
எதிர்வரும் ஒருநாள் உலக கோப்பையை கருத்தில் கொண்டு சர்வதேச அணிகள் அனைத்தும் ஒருநாள் வடிவிலான போட்டிகளில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். இந்த வகையில், நடப்பு சாம்பியன் அணியான இங்கிலாந்து அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக 4 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை கடந்த செப்டம்பர் 8 ஆம் தேதி முதல் விளையாடி வருகிறது. இந்த தொடரில், 2 போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்ற நிலையில், நேற்று 3வது போட்டி நடைபெற்றது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இதில், கடந்த வருடம் பணி சுமை காரணமாக ஒருநாள் வடிவில் இருந்து மட்டும் ஓய்வு பெறுவதாக அறிவித்து, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி மீண்டும் அணியில் இணைந்த பென் ஸ்டோக்ஸ் இடம் பெற்றார். இவர், நேற்று நடைபெற்ற போட்டியில் 124 பந்துகளில் 15 பவுண்டரி 9 சிக்ஸர் என 182 ரன்கள் குவித்து ஒருநாள் அரங்கில் அதிக ரன்கள் குவித்த இங்கிலாந்து வீரராக மாறி அசத்தி உள்ளார்.
இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் மோத போவது யார்? கடைசி யுத்தத்தில் பாகிஸ்தான் & இலங்கை!“
சுருக்கமாக கூறினால்,
- ஜூலை 19, 2022 – பென் ஸ்டோக்ஸ் ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார்.
- ஆகஸ்ட் 16, 2023 – பென் ஸ்டோக்ஸ் தனது முடிவை மாற்றினார்.
- செப்டம்பர் 13, 2023 – பென் ஸ்டோக்ஸ் ODI வரலாற்றில் இங்கிலாந்து பேட்டர் அடித்த அதிகபட்ச ஸ்கோர்.