குழந்தைகளுக்கான ஈவினிங் ஸ்நாக்ஸ் “பீட்ரூட் பன்னீர் கபாப்” – செஞ்சு பாருங்க!!

0

இல்லத்தரசிகளின் பெரும் கவலையே மாலை குழந்தைகளுக்கு எது போன்ற சத்தான ஸ்னாக்ஸ் தருவது என்பது பற்றி தான். அந்த கவலையே வேண்டாம். இன்று குழந்தைகளுக்கான “பீட்ரூட் பன்னீர் கபாப்” ரெசிபி குறித்து இந்த பதிவில் காணலாம்..!!

தேவையான பொருட்கள்

  • பீட்ரூட் – 1 (துருவி எடுத்துக்கொள்ளவும்)
  • உருளைக்கிழங்கு – 4 (வேகவைத்தது)
  • பன்னீர் – 100 கிராம்
  • சீரகம் – 1/2 டீஸ்பூன்
  • சோம்பு – 1/2 டீஸ்பூன்
  • பெரிய வெங்காயம் – 1 நறுக்கியது
  • பூண்டு – 2 பற்கள் நறுக்கியது
  • பச்சை மிளகாய் – 2 நறுக்கியது
  • மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
  • மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
  • உப்பு – 1 டீஸ்பூன்
  • கரம் மசாலா தூள் – 1/2 டீஸ்பூன்
  • புதினா – பொடியாக நறுக்கியது
  • கொத்தமல்லி – பொடியாக நறுக்கியது
  • முந்திரி பருப்பு நறுக்கியது
  • பிரட் தூள் – 2 டீஸ்பூன்
  • சாட் மசாலா தூள் – 1/2 டீஸ்பூன்
  • சோள மாவு – 3 டீஸ்பூன்
  • எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

முதலில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, இதில் சீரகம், சோம்பு, போட்டு வதக்கவும். பின்பு, இதில் பெரிய வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், சேர்த்து நன்றாக வதக்கவும்.பெரிய வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் இதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து கிண்டவும். பின், இதில் துருவிய பீட்ரூட் சேர்த்து 5 நிமிடம் வரை வதக்க வேண்டும்.

கடைசியாக இதில் கரம் மசாலா தூள் சேர்த்து அதனை நன்றாக கிண்டி விட வேண்டும். இந்த கலவையினை தனியாக எடுத்து வைத்து ஆற விட வேண்டும். சிறிது நேரம் ஆற வைத்ததும் இதில் உருளைக்கிழங்கு, பன்னீர், புதினா இலை, கொத்தமல்லி இலை, பிரட் தூள், சாட் மசாலா தூள், சோள மாவு சேர்த்து பிசையவும்.கையில் எண்ணெய் தடவி விட்டு இந்த கலவையினை தட்டையாக பிடித்து வைக்க வேண்டும்.

பின், ஒரு சட்டியினை காய வைத்து அதில் எண்ணெய் ஊற்ற வேண்டும். சட்டி சூடானதும் இதில் தட்டி வைத்துள்ள கலவையினை எடுத்து அதனை போட்டு பொன்னிறமாகும் வரை பார்த்து எடுக்க வேண்டும். இரு புறமும் நன்றாக பொன்னிறமாக வேண்டும். அவ்ளோ தான்!!

சுவையான “பீட்ரூட் பன்னீர் கபாப்” ரெடி!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here