முகப்பருவே இல்லாத சருமத்தினை பெற வேண்டுமா?? இத மட்டும் ட்ரை பண்ணி பாருங்க!!

0

இன்றைய தலைமுறை பெண்களுக்கு மிக பெரிய பிரச்சனை என்றால் அது, முகப்பரு தான். இதில் இருந்து விடுபட ஈஸியான சில ஸ்டெப்ஸ் உள்ளது. அது குறித்து இந்த பதிவில் காணலாம்..!!

முகப்பரு பிரச்சனை

பெண்களுக்கு அழகே அவர்களது முகம் தான். என்ன தான் அக அழகு முக்கியம் என்று கூறினாலும், முக அழகும் கொஞ்சம் முக்கியம் தான். அதிலும் குறிப்பாக, மிருதுவான சருமத்தினை தான் பெண்கள் என்றுமே விரும்புவர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இன்று அனைவருக்கும் இருக்கும் முக அழகு பிரச்சனை என்றால் அது, முகப்பரு தான். இதில் இருந்து மீண்டு வர எளிமையான வழிமுறைகளை பின்பற்றினால் போதும். அது,

ஸ்டேப் 1: முகம் கழுவுதல் (face wash)

எந்த ஒரு பேஸ்பேக் போடுவதாக இருந்தாலும், முதலில் குளிர்ந்த நீர் கொண்டு முகத்தினை கழுவ வேண்டும். சோப்பு அதிகமாக பயன்படுத்தாமல், மையில்டான சோப்பு பயன்படுத்தி முகத்தினை கழுவி கொள்ளுங்கள்.

ஸ்டேப் 2: ஸ்டிமிங் (steaming)

பின், ஒரு பெரிய அகலமான பாத்திரத்தில் ரோஜா இதழ்கள், எலுமிச்சை மற்றும் வெந்நீர் ஆகியவற்றை சேர்க்க வேண்டும். 5 நிமிடங்களுக்கு பிறகு, நன்றாக ஆவி பிடித்து விட வேண்டும். முகத்தில் இருக்கும் அழுக்குகளை இது நன்றாக அகற்றி விடும்.

ஸ்டேப் 3: பேஸ்பேக் (face pack)

ஒரு பாத்திரத்தில், ஓட்ஸ் மற்றும் பால் ஆகியவற்றை கலந்து கொள்ள வேண்டும். இதனை முகத்தில் தடவி கொள்ள வேண்டும். 15 நிமிடங்களுக்கு பிறகு இதனை கழுவி விட வேண்டும். கழுவும் போது, நன்றாக ஸ்ரப் செய்ய வேண்டும்.

ஸ்டேப் 4: ஐஸ் மசாஜ் (ice massage) 

ஒரு பாத்திரத்தில் ரோஸ் வாட்டர், ரோஜா இதழ்கள் மற்றும் கற்றாழை ஆகியவற்றை எடுத்து கொள்ள வேண்டும். அதனை பிரீஸரில் வைத்து ஐஸ் கியூபுகளாக மாற்றி கொள்ள வேண்டும். அதனை முகத்தில் மென்மையாக தேய்க்க வேண்டும்.

இந்த வழிமுறைகளை தொடர்ந்து பின்பற்றி வந்தால் முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி முகம் பொலிவடைந்து விடும். அதே போல் முகத்தில் உள்ள முகப்பரு விரைவாகவே நீங்கி விடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here