பீஸ்ட் படம் ரிலீஸ் தேதி – பண்டிகை நாளன்று வெளியிடும் பட குழுவினர்!!!

0
பீஸ்ட் படம் ரிலீஸ் தேதி - பண்டிகை நாளன்று வெளியிடும் பட குழுவினர்!!!
பீஸ்ட் படம் ரிலீஸ் தேதி - பண்டிகை நாளன்று வெளியிடும் பட குழுவினர்!!!

தளபதி விஜய் நடிக்கும் 65 வது படம் பீஸ்ட். இப்படத்தின் படப்பிடிப்புகள் முழு வீழ்ச்சில் தயாராகி வருகிறது. இந்த படத்தை விரைவில் ஒரு விழா நாள் அன்று பட குழுவினர் படத்தை வெளியிட போவதாக தகவல் வந்துள்ளது.

பொங்கலுக்கு வரும் பீஸ்ட்…

தளபதி விஜய் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார். பீஸ்ட் படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியானது. அது ரசிகர்களிடம் இருந்து பெரும் வரவேற்பு பெற்றது மற்றும் சில மணி நேரத்திற்குள் 270k+ லைக்குகளை பெற்றது. இந்த படத்தில் தளபதி விஜய் கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். உடன் யோகி பாபு, ஷைன் டாம் சாக்கோ, அபர்ணா தாஸ், விடிவி கணேஷ் மற்றும் ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் துணை வேடங்களில் நடிக்கின்றனர். நெல்சன் திலீப்குமார் இயக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸின் கலாநிதி மாறன் தயாரிக்கிறார். தளபதி விஜய் மற்றும் கதாநாயகியான பூஜா ஹெக்டே ஆகியோர் ஜனா மாஸ்டர் நடனம் அமைத்த ஒரு உற்சாகமான பாடலுக்காக பட காட்சிகளை படமாக்கப்பட்டது.

பொங்கலுக்கு வரும் பீஸ்ட்...
பொங்கலுக்கு வரும் பீஸ்ட்…

இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் முழு வீச்சில் நடந்து வருகிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். எனவே இந்த படத்தின் சிங்கிள் ட்ராக் பாடல் இசையமைப்பாளர் அனிருத் ரவிசந்தரின் பிறந்தநாளான அக்டோபர் 16 ஆம் தேதி வெளியிட வாய்ப்புள்ளது என்று தகவல் கசிந்துள்ளது. அக்டோபர் மாதத்திற்கு முன் முழு படப்பிடிப்பை முடிக்க பட குழுவினர் திட்டமிட்டுள்ளனர். எனவே பீஸ்ட் படம் வரும் 2022 பொங்கல் நாளன்று வெளியீட பட குழு தயாராகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here