பீஸ்ட் படத்தை பற்றிய முக்கிய தகவலை வெளியிட்ட இயக்குனர் – அதுவும் எங்க வச்சுன்னு பாருங்க!!

0

தளபதி விஜய்யின் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் பீஸ்ட். இது விஜய்க்கு 65வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, யோகி பாபு, அபர்ணா தாஸ், செல்வராகவன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் ஒவ்வொரு அப்டேட்டுக்காகவும் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளனர். இந்நிலையில் அஜித்தின் வலிமை படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளிவரும் நிலையில் பீஸ்ட் படம் எப்பொழுது வெளியாகும் என ரசிகர்கள் பெருத்த ஆவலில் உள்ளனர்.

இந்நிலையில் தெலுங்கில் சிவகார்த்திகேயன் படம் டாக்டர், வருண் டாக்டர் என்ற பெயரில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் ப்ரோமோஷன்னில் இயக்குனர் நெல்சன் கலந்துகொண்டார். அப்பொழுது பீஸ்ட் பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு டாக்டர் படம் ரிலீஸை தொடர்ந்து பீஸ்ட் பட அப்டேட் வெளியாகும் என கூறியுள்ளார். இது என்ன அப்டேட்டாக இருக்கும் என ரசிகர்கள் யோசித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here