“பீஸ்ட் படம் ஜெயிக்கணும்” – அஜித் ரசிகர்களின் செயலால் கண் கலங்கி போன தளபதி வெறியர்கள்!!

0
"பீஸ்ட் படம் ஜெயிக்கணும்" - அஜித் ரசிகர்களின் செயலால் கண் கலங்கி போன தளபதி வெறியர்கள்!!

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், இந்த படம் வெற்றி பெற வேண்டும் என அஜித் ரசிகர்கள் பேனர் வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெகிழ்ச்சி சம்பவம்:

தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ளது. விஜய் ரசிகர்கள் அனைவரும் இந்த படத்திற்கு நேர்மறையான விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர். காலம் காலமாக விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் ஒருசிலர் தங்களுக்குள் கருத்து மோதலில் ஈடுபட்டு வரும் செய்தி நாம் யாவரும் அறிந்த ஒன்று.

ஆனால், ஒரு சில ரசிகர்கள் இன்னும் அதே நட்புடன் பழகி வருகின்றனர் இந்த நிலையில், விஜய்யின் பீஸ்ட் படம் வெற்றி பெற வேண்டும் என அஜித் ரசிகர்கள் பேனர் ஒன்றை வைத்துள்ளனர். அஜித் மற்றும் விஜய்யின் போட்டோக்களோடு அவர்களின் “வாழு வாழவிடு” மற்றும் “உழைத்திடு, உயர்ந்திடு, உன்னால் முடியும்” போன்ற வாசகங்களுடன் கூடிய பேனரை வைத்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர். அந்த புகைப்படம் தற்போது அஜித் விஜய் ரசிகர்கள் மத்தியில் வேகமாக ஷேர் ஆகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here