பீஸ்ட் படத்தின் ஷூட்டிங் அப்டேட் – கொண்டாட்டத்தில் தளபதி வெறியன்ஸ்!!

0
பீஸ்ட் படத்தின் ஷூட்டிங் அப்டேட் - கொண்டாட்டத்தில் தளபதி வெறியன்ஸ்!!
பீஸ்ட் படத்தின் ஷூட்டிங் அப்டேட் - கொண்டாட்டத்தில் தளபதி வெறியன்ஸ்!!

தமிழ் திரையுலகின் தளபதி நடித்து வரும் பீஸ்ட் படத்தின் முக்கிய தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை கேட்ட விஜய் வெறியர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

பீஸ்ட் அப்டேட்

தளபதி விஜய்யின் திரைப்படங்கள் அனைத்துமே தற்போது மாஸ் ஹிட் அடித்து வருகிறது. தெறி படத்தில் இருந்தே தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார் விஜய். மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

பீஸ்ட் படத்தின் ஷூட்டிங் அப்டேட் - கொண்டாட்டத்தில் தளபதி வெறியன்ஸ்!!
பீஸ்ட் படத்தின் ஷூட்டிங் அப்டேட் – கொண்டாட்டத்தில் தளபதி வெறியன்ஸ்!!

சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படத்தை இயக்கிய நெல்சன் பீஸ்ட் படத்தை இயக்கி வருகிறார். மேலும் விஜய் உடன் முதன்முதலாக ஜோடி சேர்ந்துள்ளார் தெலுங்கு பட நடிகை பூஜா ஹெக்டே. இந்நிலையில் தான் நாளுக்கு நாள் பீஸ்ட் படத்தை பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. பூஜா ஹெக்டே தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது ஷூட்டிங் அனைத்தும் முடிவடைந்து விட்டதாக கூறியிருந்தார்.

இப்பொழுது மீண்டும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் கிட்டத்தட்ட 65% ஷூட்டிங் அனைத்துமே முடிவடைந்து விட்டதாம். எப்படியும் நவம்பர் மாத இறுதிக்குள் ஷூட்டிங் முடிவடைந்து விடும் என்றும் சினிமா வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

பீஸ்ட் படத்தின் ஷூட்டிங் அப்டேட் - கொண்டாட்டத்தில் தளபதி வெறியன்ஸ்!!
பீஸ்ட் படத்தின் ஷூட்டிங் அப்டேட் – கொண்டாட்டத்தில் தளபதி வெறியன்ஸ்!!

அதுமட்டுமில்லாமல் பொங்கலுக்கு தான் இந்த படம் ரிலீஸாக உள்ளதாகவும் ஏற்கனவே தகவல் வெளியானது. அதனை வைத்து பார்க்கும்போது எப்படியும் இது உண்மையாக தான் இருக்கும் என்று தளபதி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். ஆனால் இதுகுறித்த எந்த அதிகாரபூர்வ தகவலும் இன்னும் வெளியாகவில்லை.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here