பீஸ்ட் இயக்குனர் நெல்சன் மீது கடுங்கோபத்தில் இருக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் – என்ன காரணம் தெரியுமா?

0

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள பீஸ்ட் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் நெல்சன் மீது சன் பிக்சர்ஸ் நிறுவனம் படப்பிடிப்பில் அதிகமாக செலவு செய்து விட்டதாக கடும் கோபத்தில் உள்ளனராம்.

இயக்குனர் நெல்சன்:

சின்ன திரையில் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் வெளிவந்த சில ரியாலிட்டி ஷோக்களில் இயக்குனராக பணியாற்றியவர் இயக்குனர் நெல்சன் திலீப்குமார். பின்னர் சினிமாவில் களமிறங்கி டாக்டர், கோலமாவு கோகிலா போன்ற வெற்றிப்படங்களை தந்தார். மேலும் அதற்கு பிறகு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்தை இயக்கி உள்ளார். தற்போது இந்த படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து ரிலீஸ்க்கு காத்து இருக்கிறது.

மேலும் இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தயாரித்து உள்ளது. இந்நிலையில் இயக்குனர் நெல்சன் மீது சன் பிக்சர்ஸ் நிறுவனம் கடும் கோபமாக உள்ளதாம். அதாவது பீஸ்ட் படத்தின் முன்பு கூறிய செலவை விட படப்பிடிப்பு செலவை அதிகமாக செய்து உள்ளார் நெல்சன். ஆனால் நெல்சனோ அந்த செலவுகள் எதுவும் நான் செய்யவில்லை படத்தின் புரொடக்‌ஷன் மேனேஜர் உதயகுமார் செய்து உள்ளார் என்று ஜகா வாங்கியுள்ளார். தற்போது இந்த தகவல் விஜய் ரசிகர்கள் இடையே தீயாய் பரவி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here