நான் எந்த பதவிக்கும் போட்டியிடவில்லை., வதந்திக்கு முற்றுப் புள்ளி வைத்த இந்திய வீரர்!!

0
நான் எந்த பதவிக்கும் போட்டியிடவில்லை., வதந்திக்கு முற்றுப் புள்ளி வைத்த இந்திய வீரர்!!
நான் எந்த பதவிக்கும் போட்டியிடவில்லை., வதந்திக்கு முற்றுப் புள்ளி வைத்த இந்திய வீரர்!!

இந்திய அணி இந்த வருடத்தில், ஆசிய கோப்பை மற்றும் டி20 உலக கோப்பை போன்ற பெரிய அளவிலான தொடர்களை வெல்ல தவறியதால் பிசிசிஐயானது பல அதிரடியான முடிவுகளை எடுத்திருந்தது. இதில், குறிப்பாக, இந்த தொடருக்கு எல்லாம் இந்திய அணியை தேர்வு செய்த சேத்தன் ஷர்மா தலைமையிலான தேர்வு குழுவை பிசிசிஐ நீக்கியது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

தேர்வு குழுவை மொத்தமாக நீக்கியதால், புதிய தேர்வுக் குழுவை உருவாக்க பிசிசிஐயானது தீவிரம் காட்டியது. இதன்படி, தலைவர் உள்ளிட்ட 5 பதவிகளுக்கான இடத்தை நிரப்ப, இரு வாரங்களுக்கு முன்னரே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவித்தனர். இதனால் இந்த பதவிகளுக்கு தகுதி உடையோர் கடந்த 28ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது.

IND vs NZ 3rd ODI: முடிவில்லாமல் போன ஆட்டம்…, தொடரை வென்ற நியூசிலாந்து!!

இந்நிலையில், இந்திய முன்னாள் வீரரான ஹேமங் பதானி இந்த பதவிகளுக்கு விண்ணப்பித்துள்ளதாக வதந்திகள் பரவி வந்தன. இந்த வதந்திகளுக்கு, ஹேமங் பதானி தனது ட்விட்டர் பக்கத்தில் பதில் அளித்துள்ளார். அதில், எனது அன்பான ரசிகர்கள் மற்றும் நண்பர்களுக்கு என ஆரம்பித்து, நான் இந்த பதவிக்கு விண்ணப்பிக்க வில்லை. விண்ணப்பித்த அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here