உலக கோப்பையை வெல்லததால் பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு…, புது தேர்வுக் குழுவை உருவாக்க திட்டமா?? என்னென்ன தகுதிகள்…, முழு விவரம் உள்ளே!!

0
உலக கோப்பையை வெல்லததால் பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு..., புது தேர்வுக் குழுவை உருவாக்க திட்டமா?? என்னென்ன தகுதிகள்..., முழு விவரம் உள்ளே!!
உலக கோப்பையை வெல்லததால் பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு..., புது தேர்வுக் குழுவை உருவாக்க திட்டமா?? என்னென்ன தகுதிகள்..., முழு விவரம் உள்ளே!!

உலக கோப்பையை வெல்ல தவறியதால், தேர்வு குழுவை ஒட்டுமொத்தமாக நீக்கி பிசிசிஐயானது அதிரடி முடிவை எடுத்துள்ளது. மேலும், புது தேர்வு குழுவை உருவாக்க தகுதி உடையோர் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளது.

பிசிசிஐயின் அதிரடி:

இந்திய அணியானது, நடப்பு ஆண்டில் நடைபெற்ற டி20 உலக கோப்பை மற்றும் ஆசிய கோப்பை போன்ற தொடர்களில், கோப்பையை வெல்ல தவறியதால், பிசிசிஐயானது அதிரடியான முடிவு ஒன்றை எடுத்துள்ளது. அதாவது, இந்த தொடர்களுக்கு எல்லாம், சேத்தன் ஷர்மா தலைமையிலான தேர்வுக்குழு தான் இந்திய அணியை தேர்வு செய்தது. ஆனால் இப்போது இந்த தேர்வு குழுவில் இடம்பெற்றுள்ள அனைவரையும் பிசிசிஐயானது நிக்கி உள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்திய அணி சர்வதேச அளவில் கோப்பைகளை வெல்லாமல் வருவதற்கு, அணி வீரர்கள் தேர்வு தான் என பல்வேறு தரப்பில் இருந்து விமர்சனங்கள் வந்த வண்ணம் இருந்தால், பிசிசியானது இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சேத்தன் ஷர்மா தலைமையிலான தேர்வுக் குழுவை மொத்தமாக நீக்கியதால், தற்போது தலைவர் உள்ளிட்ட 5 பதவிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்க்கப் பட்டுள்ளதாக அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.

ISL 2022: சென்னை vs ஜாம்ஷெட்பூர்…, 2வது வெற்றியை பதிவு செய்த ஈஸ்ட் பெங்கால்!!

இந்த விண்ணப்பங்கள் அனைத்து, நவம்பர் 28ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும், இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க, குறைந்தபட்சம் 7 டெஸ்ட் போட்டிகள் அல்லது குறைந்தபட்சம் 30 முதல் தர போட்டிகள் அல்லது குறைந்தபட்சம் 10 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 20 முதல் தர போட்டிகள் விளையாடிய அனுபவம் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று 5 வருடங்கள் நிறைவடைந்து இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here