ரோஹித் சர்மா கேப்டன்சிக்கு செக் வைத்த பிசிசிஐ…, அதை முறியடிப்பாரா??

0
ரோஹித் சர்மா கேப்டன்சிக்கு செக் வைத்த பிசிசிஐ..., அதை முறியடிப்பாரா??
ரோஹித் சர்மா கேப்டன்சிக்கு செக் வைத்த பிசிசிஐ..., அதை முறியடிப்பாரா??

சமீபகாலமாக இந்திய அணியானது, ஐசிசியின் எந்த ஒரு கோப்பையையும் வெல்லாததால், பிசிசிஐயானது ரோஹித் சர்மாவுக்கு செக் ஒன்றை வைத்துள்ளனர்.

பிசிசிஐ:

இந்திய அணியானது, கடந்த சில ஆண்டுகளாக ஐசிசி சார்பான எந்த ஒரு பெரிய தொடரையும் வெல்லவில்லை. இதனால், இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்தை அடைந்து வருகின்றன. ரோஹித் சர்மா தலைமையின் கீழ் ஆவது, கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை, ஆசிய கோப்பை உள்ளிட்டவற்றை இந்திய அணி வெல்லும் என எதிர்பார்த்த நிலையில், அதுவும் ஏமாற்றத்திலேயே முடிந்தது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதனால், பிசிசிஐயானது, இந்திய அணியின் ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியின் கேப்டனான ரோஹித் சர்மாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, எதிர் வரும் பார்டர் கவாஸ்கர் டிராபியை ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி குறைந்தப்பட்சம் 3-1 (3-0) என்ற கணக்கில் வெல்ல வேண்டும்.

தெற்காசிய கால்பந்து லீக்: தொடர்ந்து அசத்தும் இந்திய படை…, டிராவில் முடிந்த பங்களாதேஷுக்கு எதிரான போட்டி!!

அவ்வாறு வென்றால் மட்டுமே, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும். இந்த இறுதிப் போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றால் தான், ஐசிசி கோப்பைக்கான இந்திய ரசிகர்களின் ஏக்கம் தீரும். இதனால், இந்த 5 டெஸ்ட் போட்டியை பொறுத்தே, ரோஹித் சர்மாவின் எதிர்கால கேப்டன்சி பொறுப்பு இருக்கும் என பிசிசிஐ எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here