இந்திய அணியின் புதிய தேர்வுக் குழுவை அறிவித்த பிசிசிஐ…, மீண்டும் சேத்தன் சர்மா தலைமையிலா??

0
இந்திய அணியின் புதிய தேர்வுக் குழுவை அறிவித்த பிசிசிஐ..., மீண்டும் சேத்தன் சர்மா தலைமையிலா??
இந்திய அணியின் புதிய தேர்வுக் குழுவை அறிவித்த பிசிசிஐ..., மீண்டும் சேத்தன் சர்மா தலைமையிலா??

இந்திய அணியின் 5 பேர் கொண்ட புதிய தேர்வுக் குழுவை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவித்துள்ளார்.

புதிய தேர்வு குழு:

இந்திய அணி கடந்த ஆண்டு ஆசிய கோப்பை மற்றும் டி20 உலக கோப்பை தொடர்களை வெல்லாததை அடுத்து, பிசிசிஐயானது, இந்திய அணியின் சேத்தன் சர்மா தலைமையிலான தேர்வு குழுவை முற்றிலுமாக நீக்கியது. இதைடுத்து, புதிய தேர்வுக் குழுவை உருவாக்க பிசிசிஐயானது விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கடந்த நவம்பர் 18 ம் தேதி அறிவித்திருந்தது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதன்படி, தலைவர் உட்பட 5 பதவிகளுக்காக 600 விண்ணப்பங்கள் பெறப்பட்டதாக தகவல் வெளியானது. இதற்கிடையில், ஜனவரி 1 அன்று பிசிசிஐ கூடிய கூட்டத்தில், சேத்தன் சர்மாவை தேர்வு குழுவின் தலைவராக தொடர்வார் என அறிவித்திருந்தது. ஆனால், தேர்வு குழுவை முழுமையாக அறிவிக்க வில்லை. இந்நிலையில், திருமதி சுலக்ஷனா நாயக், திரு அசோக் மல்ஹோத்ரா மற்றும் திரு ஜதின் பரஞ்சபே ஆகியோர் அடங்கிய கிரிக்கெட் ஆலோசனை குழு (CAC) தேர்வு குழுவை அறிவித்துள்ளது.

ஜடேஜா அணிக்கு திரும்புவது எப்போது?? பதில் அளித்த ஆல் ரவுண்டர் கிங் அஸ்வின்!!

பெறப்பட்ட 600 விண்ணப்பங்களில் இருந்து, தகுதி உடைய 11 நபர்களை தேர்வு செய்து நேர்காணலின் அடிப்படையில், தேர்வு குழுவை பரிந்துரைத்துள்ளது. சேத்தன் சர்மாவின் கீழ், சிவசுந்தர் தாஸ், சுப்ரோதோ பானர்ஜி, சலில் அங்கோலா மற்றும் ஸ்ரீதரன் சரத் ஆகியோர் இனி வரும் காலங்களில் முத்த இந்திய அணியின் தேர்வு குழுவாக இருப்பார்கள் என பிசிசிஐயின் செயலாளர் ஜெய் ஷா அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here