இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு புதிய பயிற்சியாளர் – பிசிசிஐ நியமனம்!!

0

இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு தற்போது புதிய தலைமை பயிற்சியாளரை பிசிசிஐ நியமித்துள்ளது. இதனை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்தார். தற்போது புதிய பயிற்சியாளருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

மகளிர் அணி:

இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் மிக அதிகமான ரசிகர்களை கொண்டு கவரப்படும் விளையாட்டு தான் கிரிக்கெட் போட்டி. தொடக்கத்தில் இருந்தே ஆண்கள் கிரிக்கெட் தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் மிக அதிக அளவிலான வரவேற்பு இருந்து வருகிறது. இந்நிலையில் மகளிர் கிரிக்கெட் போட்டிகளையும் இதுபோல் புகழடைய செய்யும் வகையில் கிரிக்கெட் கமிட்டி முடிவு செய்தது.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

இதற்காக பல்வேறு மகளிர் கிரிக்கெட் தொடர்கள் நடத்தப்பட்டு பல்வேறு அணிகள் தற்போது விளையாடி வருகிறது. அதேபோல் மகளிருக்கான உலகக்கோப்பை தொடரும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்திய மகளிர் அணியின் தலைமை பயிற்சியாளராக வுக்கேறி ராமன் திகழ்ந்து வந்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆக்சிஜன் உற்பத்திக்கு முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு சிறப்பு மானியம் – தமிழக அரசு அதிரடி!!

தற்போது இந்திய மகளிர் அணிக்கான தலைமை பயிற்சியாளராக புதிய நபரை பிசிசிஐ நியமித்துள்ளது. அதன்படி புதிய தலைமை பயிற்சியாளராக ரமேஷ் போவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். தற்போது தலைமை பயிற்சியாளராக பதவியேற்றுள்ள ரமேஷிற்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here