இந்திய அணியில் இணைய பிசிசிஐ வெளியிட்ட விண்ணப்பம்…, என்னென்ன தகுதிகள் தேவை?? முழு விவரம் உள்ளே!!

0
இந்திய அணியில் இணைய பிசிசிஐ வெளியிட்ட விண்ணப்பம்..., என்னென்ன தகுதிகள் தேவை?? முழு விவரம் உள்ளே!!
இந்திய அணியில் இணைய பிசிசிஐ வெளியிட்ட விண்ணப்பம்..., என்னென்ன தகுதிகள் தேவை?? முழு விவரம் உள்ளே!!

இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கான தலைமை பயிற்சியாளரை தேர்வு செய்ய, பிசிசிஐ மும்முரமாக இருக்கிறது.

பிசிசிஐ:

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமானது, மகளிர் அணிக்கான புதிய தலைமை பயிற்சியாளர் பதவிக்கான விண்ணப்பத்தை குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளது. அதாவது, கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில், இந்திய மகளிர் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ரமேஷ் பவார் தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு மாற்றப்பட்டார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதன் பிறகு, இந்திய மகளிர் அணி, பேட்டிங் பயிற்சியாளரான ஹிருஷிகேஷ் கனிட்கர் தற்காலிகமாக அணியை மேற்பார்வையிட்டார். கடந்த டி20 உலகக்கோப்பை தொடருக்கு கூட இந்திய அணி, தலைமை பயிற்சியாளர் இல்லாமல் தான் விளையாடியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அந்த இடத்தை நிரப்புவதற்கான பணியில், பிசிசிஐ மும்முரமாக இறங்கி உள்ளது. அதாவது, இந்த தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான தகுதிகளை வெளியிட்டுள்ளது.

ஆசிய கோப்பை 2023: இந்தியா, பாகிஸ்தானுக்கு டஃப் கொடுக்க களமிறங்கும் புதிய அணி!!

அதாவது, சர்வதேச அளவில் இந்தியா அல்லது வேறு எந்த நாட்டையும் பிரதிநிதித்துவப்படுத்தி இருக்க வேண்டும் அல்லது குறைந்தபட்ச NCA நிலை ‘C’ பயிற்சி சான்றிதழ் அல்லது ஒரு புகழ்பெற்ற நிறுவனத்தில் இருந்து ஒத்த சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மேலும், குறைந்தபட்சம் 50 முதல் தர விளையாட்டுகளில் பங்கு பெற்றிருக்க வேண்டும். சர்வதேச அணிக்கு குறைந்தபட்சம் ஒரு பருவ காலத்திற்கு அல்லது இரண்டு சீசன்களுக்கு T20 உரிமையை பயிற்சியளித்த அனுபவம் இருக்க வேண்டும். தகுதி உடையவர்கள் வரும் மே 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தகவல் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here