ACC எமர்ஜிங் மகளிர் ஆசிய கோப்பை.., இந்திய அணியை அறிவித்த BCCI.., கேப்டன் யார் தெரியுமா??

0
ACC எமர்ஜிங் மகளிர் ஆசிய கோப்பை.., இந்திய அணியை அறிவித்த BCCI.., கேப்டன் யார் தெரியுமா??
ACC எமர்ஜிங் மகளிர் ஆசிய கோப்பை.., இந்திய அணியை அறிவித்த BCCI.., கேப்டன் யார் தெரியுமா??

இந்திய ஆண்கள் அணி இப்போது ICC உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்க இங்கிலாந்து சென்றுள்ளது. இதை தொடர்ந்து இந்திய மகளிர் A அணி ஹாங்காங்கில் நடைபெற உள்ள ACC எமர்ஜிங் மகளிர் ஆசிய கோப்பையில் பங்கேற்க உள்ளது. இந்தத் தொடர் ஜூன் 12ம் தேதி தொடங்கி 21 ஆம் தேதி முடிவடைய உள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதில் இந்தியா, தாய்லாந்து, ஹாங்காங், பாகிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, மலேசியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய 8 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக், பிளே ஆப் போட்டிகள் நடத்தப்பட உள்ளது. இதை தொடர்ந்து இறுதிப் போட்டி ஜூன் 21ஆம் தேதி அரங்கேற உள்ளது. இந்நிலையில் BCCI ஏசிசி எமர்ஜிங் மகளிர் ஆசிய கோப்பையில் பங்கேற்கும் இந்திய அணியை ஸ்வேதா செஹ்ராவத் வழிநடத்துவார் என அறிவித்துள்ளது.

அதுக்கு இன்னும் நான் ரெடியாகலங்க., அப்படி ஒன்னு நடந்தா நானே சொல்றேங்க., கீர்த்தி சுரேஷின் அதிரடி பதில்!!

India ‘A’ (Emerging) Squad:

ஸ்வேதா செஹ்ராவத் (கேப்டன்), சௌம்யா திவாரி (துணை கேப்டன்), த்ரிஷா கோங்காடி, முஸ்கன் மாலிக், ஸ்ரேயங்கா பாட்டீல், கனிகா அஹுஜா, உமா செத்ரி (விக்கெட் கீப்பர்), மம்தா மடிவாலா (விக்கெட் கீப்பர்), டிடாஸ் சாது, யஷஸ்ரீ சோப்ரா, பர்ஷேவி, பர்சேவி மன்னத் காஷ்யப், பி அனுஷா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here