எந்த பதட்டமும் இல்லாமல் பிபி ஜோடிகள் இறுதி சுற்றில் போட்டியாளர்கள் செய்த காரியத்தை பாருங்களே – ஆனாலும் இவ்வளவு தைரியம் ஆகாதுப்பா!!

0

விஜய் டிவியில் பிபி ஜோடிகள் நிகழ்ச்சி பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் இறுதி சுற்றில் ஐஸ்வர்யா, கேபி, சம்யுக்தா மற்றும் நிஷா இணைந்து போட்ட குத்தாட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

பிபி ஜோடிகள்

பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்த பிறகு அதில் கலந்துகொண்டவர்களை வைத்து எடுக்கப்பட்ட நிகழ்ச்சி தான் பிபி ஜோடிகள். ஏற்கனவே டான்ஸ் நிகழ்ச்சி விஜய் டிவி பிரபலமாக ஒளிபரப்பாகி வந்தது தான். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டதால் மேலும் சுவாரசியம் அதிகரித்தது.

ஏனெனில் பிக் பாஸ் வீட்டில் அத்தனை சண்டை, பிரச்சனை என கலைக்கட்டியதால் தான் பிரபலமடைந்தது. பிபி ஜோடிகள் என்று சொன்னதும் சரி மொக்கையாக தான் இருக்கும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு பெரிய ஷாக் தான். ஏனெனில் அனைவருக்குமே தங்களது திறமையை இந்த நிகழ்ச்சியில் தான் வெளிக்காட்டினர்.

ஆஜித்துக்கு இந்த அளவிற்கு டான்ஸ் ஆட தெரியுமா?? என்று அப்பொழுது தான் அனைவருக்குமே தெரியும். மேலும் அனிதா, சோம், நிஷா மற்றும் சம்யுக்தா போன்றோரும் கலக்கி வருகின்றனர். இப்பொழுது பிபி ஜோடிகள் இறுதி சுற்றை நெருங்கியுள்ளது.

குறிப்பு எழுதுங்கள் எந்தன் தோளில்… திறந்த புத்தகமாக அவதாரம் எடுத்த பாக்கியலட்சுமி நேஹா!!!

இதில் அனிதா மற்றும் ஷாரிக் ஜோடிக்கு ஆதரவு இருந்து வருகிறது. சாதாரண கான்செப்ட்டிலேயே வெறித்தனமாக ஆடுவார்கள். இப்பொழுது இறுதி சுற்று என்றால் சொல்லவா வேண்டும்?? ஆனால் அவர்களுக்கு மேலும் டஃப் கொடுக்கும் வகையில் ஆஜித்-கேபி ஜோடி வேறு உள்ளது.

இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக ஓவியா, லாஸ்லியா, சாக்ஷி, மற்றும் அபிராமி போன்றோர் கலந்துகொள்ளவுள்ளனர். இந்நிலையில் மேடையில் எந்த பதட்டமும் இல்லாமல் பரம சுந்தரி பாடலுக்கு ஐஸ்வர்யா, கேபி, சம்யுக்தா மற்றும் நிஷா ரீல்ஸ் செய்துள்ளனர். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here