பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் நேர்ந்த விபரீதம் – சுஜா வருணிக்கு நிகழ்ந்த கருச்சிதைவு! கணவர் சிவகுமார் கதறல்!!

0
பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் நேர்ந்த விபரீதம் - சுஜா வருணிக்கு நிகழ்ந்த கருச்சிதைவு! கணவர் சிவகுமார் கதறல்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி சமீபத்தில் முடிவடைந்த  பிபி ஜோடிகள் 2 நிகழ்ச்சியில் பங்கேற்ற போது  தங்களுக்கு ஏற்பட்ட சோகம் குறித்து சுஜா வருணி, சிவகுமார் தம்பதி சோக பதிவை வெளியிட்டுள்ளனர்.

தம்பதி கதறல்:

பிக் பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியை தொடர்ந்து,  பிபி ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சி வெற்றிகரமாக தொடங்கப்பட்டது. இதன் 2வது சீசன் கடந்த சில தினங்களுக்கு முன் தொடங்கப்பட்டு அண்மையில் நிறைவு பெற்றது. இந்த நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியில் வெற்றியாளர்களாக அமீர்- பாவனி மற்றும் சுஜா வருணி-சிவகுமார் ஜோடிகள் அறிவிக்கப்பட்டனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்குப் பின் அண்மையில் பேட்டியளித்த, சுஜா மற்றும் சிவகுமார் தம்பதி சோகப் பதிவு ஒன்றை வெளியிட்டனர். இது பற்றி பேசிய சிவகுமார், ஒரு சுற்றில் ஆடும் போது சுஜா கீழே விழுந்து விட்டார் என்றும், இதுகுறித்து மருத்துவமனையில் பரிசோதித்த போது  அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது என தெரிவித்தார்.

பின் கொஞ்ச நாட்கள் கழித்து, திடீரென இரத்தப்போக்கு அதிகமானது. மீண்டும் மருத்துவமனையில் சென்று பரிசோதித்த போது, கரு கலைந்து விட்டது என்ற அதிர்ச்சி தகவலை மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் மனமுடைந்து விட்டோம் என சோகத்துடன் பேசியுள்ளார். இவரின் இந்த பதிவுக்கு, நெட்டிசன்கள் தற்போது வருத்தம் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here