நயன் மூஞ்சி இப்படி ஆனதற்கு இதுதான் காரணம்.., உண்மையை உடைத்த பயில்வான் ரங்கநாதன்!!

0
நயன் மூஞ்சி இப்படி ஆனதற்கு இதுதான் காரணம்.., உண்மையை உடைத்த பயில்வான் ரங்கநாதன்!!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகை நயன்தாரா. தற்போது இவர் அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் மூலம் பாலிவுட்டில் கணக்கை தொடங்கிய நயனுக்கு, அடுத்தடுத்த படங்களில் வாய்ப்பு கிடைக்கும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

தற்போது தனது ஆசை காதலனான விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். அவருக்கு 38 வயதானாலும் இளமையாகவே காணப்படுகிறார். இதற்கு அவருடைய மேக்கப் தான் காரணம் என்று சில விமர்சனங்கள் கிளம்பினாலும், எதையும் காதில் போட்டு கொள்ளாமல் தனது கேரியரில் கவனம் செலுத்தி வருகிறார்.

உங்களுக்கு நான் வில்லன் தான்.., ஆனா அவருக்கு நான் தான் ஹீரோ.., நெஞ்சை உருகவைத்த ஜான் கொக்கன்!!

இந்நிலையில் இவரை குறித்து பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பேசியது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதாவது, அந்த காலத்தில் எல்லாம் முன்னணி நடிகைகளான ரோஜா தேவி, சாவித்திரி, பத்மினி, ச தேவிகா உள்ளிட்ட பல பிரபலங்கள் தங்களது முகத்தில் மஞ்சள் உள்ளிட்ட பல இயற்கையான பொருட்களை வைத்து மேக்கப் போட்டுக்கொண்டனர்.

ஆனால் இன்றைய நடிகைகள் எல்லாம் அமெரிக்காவில், லண்டனில் என்ன மேக்கப் பொருட்கள் இருக்கிறதோ அதை வாங்கி பயன்படுத்துகிறார். அந்த ஊர் மேக்கப் பொருள்கள் எப்படி நம்ம ஊருக்கு சரிப்பட்டு வரும். ரசாயன பொருட்கள் கலந்த மேக்கப்புகளை போட்டால் முக பாவனை வராது. இதனால் தான் நயன்தாரா போன்ற பல நடிகைகள் தங்களது முக பொழிவை இழந்ததற்கு முக்கிய காரணம் என்று பயில்வான் கூறியுள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here