சுற்றுலாப் பயணிகளே உஷார்.., கனமழையால் இந்த அருவியில் குளிக்க தடை.., ஏமாற்றத்துடன் செல்லும் மக்கள்!!!

0

சுற்றுலாப்பயணிகளின் பிரசித்தி பெற்ற தேனி மாவட்ட சுருளி அருவியில் கடந்த சில நாட்களாக தண்ணீர் வரத்து சீராக உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் என அனைவரும் நீராடி வந்தனர். மேலும் இங்குள்ள பூதநாராயணன் கோவிலில் கடந்த தை அமாவாசையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தர்ப்பண சடங்குகளும் செய்தனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்நிலையில் சுருளி அருவி நீர் பிடிப்பு பகுதியான மேகமலையில் நேற்று கனமழை பெய்துள்ளது. இதனால் இரவு முழுவதும் கனமழை நீண்டதால் சுருளி அருவியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக பொதுமக்களின் பாதுகாப்பு கருதி சுருளி அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

மத்திய பட்ஜெட் 2023., அரசு ஊழியர்களுக்கு வரப்போகும் ஜாக்பாட்! என்னன்னு தெரியுமா?

எனவே இங்கு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். மேலும் மறு அறிவிப்பு வரும் வரை தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாக வனச்சரகர் பிச்சைமணி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here