தமிழக அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி…, வனத்துறையினர் விதித்த தடை நீக்கம்!!

0
தமிழக அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி..., வனத்துறையினர் விதித்த தடை நீக்கம்!!
தமிழக அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி..., வனத்துறையினர் விதித்த தடை நீக்கம்!!

தமிழகத்தில் உள்ள பொது மக்களுக்கு ஆன்மீக தலமாகவும், சுற்றுலா தலமாகவும் விளங்கக்கூடிய ஒன்றுதான் தேனி மாவட்டத்தில் உள்ள சுருளி அருவி. இங்கு ஜூன் முதல் அக்டோபர் மாதங்களில் நீர்வரத்து மிகுதியாக இருப்பதால் அப்போது நிறைய சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம். ஆனால், கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் 2 குட்டிகளுடன் 8 யானைகள் சுருளி அருவி அருகே முகாமிட்டிருந்தன.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதனை அறிந்த வனத்துறையினர், சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பக்தர்கள் வளாகத்திற்கு செல்லவும் தடை விதித்திருந்தது. இதற்கிடையில், இன்று (ஆகஸ்ட் 8) அதிகாலை யானைகள் அனைத்தும் உள் வனப்பகுதிக்கு சென்றுள்ளது. இதனை கண்காணித்த வனத் துறையினர் இன்று முதல் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் அருவியில் குளிக்க அனுமதி அளித்துள்ளது.

தமிழக பள்ளி மாணவர்களுக்கு ரூ.1000 உதவித்தொகை.., விண்ணப்பிக்க இது தான் கடைசி தேதி.., முக்கிய அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here