இதெல்லாம் ஒரு செயலா? – யூடியூப் வீடியோ பார்த்து கருக்கலைப்பில் ஈடுபட்ட பெண்: மருத்துவமனையில் கவலைக்கிடம்!

0

நாக்பூரை சேர்ந்த பெண் ஒருவர் முறையில்லாத பழக்கத்தால் கருவுற்று, அந்த கர்ப்பத்தை யூடியூப் வீடியோ மூலம் கருக்கலைப்பு செய்ய முயன்று அதனால் கடுமையாக உடல் பலவீனமடைந்து தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முறையற்ற கருக்கலைப்பு:

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் அருகே உள்ள யசோதா நகரை சேர்ந்த 25 வயதுடைய பெண் ஒருவர் ஆண் நண்பருடன் நெருக்கமாக பழகி வந்தார்.  இதனால், கர்ப்பம் தரித்த அந்த பெண், தான் கருவுற்ற விஷயத்தை அந்த ஆண் நண்பரிடம் தெரிவித்துள்ளார். இந்த கர்ப்பத்தை கலைத்து விடு என்ற ஆண் நண்பரின் அறிவுரையை ஏற்ற அந்த பெண், மருத்துவமனைக்கு சென்றால் விஷயம் வெளியே தெரிந்து விடுமோ என்ற பயத்தால், சமூக வலைத்தளமான யூடியூபில் இது சம்பந்தப்பட்ட வீடியோக்களை பார்த்து கருக்கலைப்பு செய்ய முயன்றுள்ளார்.

இதில் கடுமையாக பாதிக்கப்பட்டு, பெருத்த இரத்தப்போக்கு காரணமாக மயங்கி சரிந்த அந்த பெண் தற்போது கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here