
பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது ரசிகர்கள் ஹேமா தான் ஆசிரமத்தில் இருந்து எடுத்து வளர்க்கப்பட்ட குழந்தை தான் என்று தெரிந்ததும் உடைத்து போகிறார். யார் என்ன சமாதானம் செய்தும் ஹேமாவை தேற்ற முடியவில்லை. பாரதி வெண்பா கழுத்தில் தாலி கட்டப்போனதால் ஏற்பட்ட வினை தான் இது.
மேலும் பாரதியிடம் ஹேமா மூஞ்சி கொடுத்து கூட பேசவில்லை. இந்நிலையில் ப்ரோமோ ஒன்று வைரலாகி வருகிறது. அதாவது ஹேமா வீட்டை விட்டு வெளியேற தயாராகி விட்டார். நான் ஒரு அனாதை தானே என்று சொல்கிறார். இதனை கண்ணம்மாவால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
ஹேமாவிடம் உண்மையையை சொல்லவரும் போது சௌந்தர்யா தடுத்து நிறுத்துகிறார். ஆனால் கண்ணம்மா அதனை கண்டுகொள்ளவே இல்லை. நான் தான் உன்ன 10 மாசம் சுமந்து பெத்த அம்மா என்று சொல்கிறார். பாரதிக்கு அதனை ஏற்றுக்கொள்கிறார்.
இதனை வைத்து பார்க்கும்போது கண்டிப்பாக ஹேமா பாரதியை டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க வைத்து விடுவார். ஏனெனில் பாரதி ஹேமா மேல் உயிரையே வைத்திருக்கும் நிலையில் அவரது பேச்சுக்காவது மதிப்பு கொடுப்பார். மேலும் இதனை வைத்து தான் பாரதி கண்ணம்மா சீரியல் விரைவில் முடிவுக்கு வரும்.